Thursday, February 21, 2008

பாப்பா ! பாப்பா !

காற்றடித்தால் சிரிக்கும் !
கைபட்டால் சிரிக்கும் !
சேர்த்தணைத்தால் சிரிக்கும்!
சிங்காரப் பாப்பா!!

தொட்டாலும் சிவக்கும்!
தேன்சிட்டாகப் பறக்கும்!
கண்பட்டால் கலங்கும்!
பண்கேட்டால் தூங்கும்!

பஞ்சாகப் பறக்கும்!
நெஞ்சம் குலுங்க
அஞ்சாது பார்க்கும்!
அதற்கென்ன தெரியும் ?
அம்மாவின் தவிப்பு!

21 comments:

செல்விஷங்கர் said...

சோதனை மறுமொழி

மங்களூர் சிவா said...

அப்பிடி என்னங்க அம்மாக்கு தவிப்பு!!??

மங்களூர் சிவா said...

நல்லா இருக்கீங்களா?

செல்விஷங்கர் said...

வருகைக்கு நன்றி சிவா - நல்லா இருக்கேன் - அம்மாவோட தவிப்பெ உங்கம்மா கிட்டேப் போய்க் கேளு

செல்விஷங்கர் said...

பின்னூட்டக் கயமை

மங்களூர் சிவா said...

மொதல்ல எனக்கு இந்த பாப்பா பாட்டு எதுக்குன்னு புரியல!!

நீங்க பார்க்ல பாத்த பாப்பாக்காக இண்ஸ்டண்ட் பாட்டுன்னு சொன்னாங்க!!

அப்புறம்தான் புரிஞ்சது!!

மங்களூர் சிவா said...

//
செல்விஷங்கர் said...
வருகைக்கு நன்றி சிவா - நல்லா இருக்கேன் - அம்மாவோட தவிப்பெ உங்கம்மா கிட்டேப் போய்க் கேளு
//

இதுக்காக இப்ப ஒரு ரெண்டாயிர ரூபா செலவு வைக்கிறீங்களே!!

செல்விஷங்கர் said...

சிவா - அம்மாவெப் பாக்கறதுக்கு ஒரு 2000 செலவழிக்க முடியாதா - ஷேர் மார்கெட்லே சம்பதிச்சுக்கேய்யேன் - இன்ஸ்டண்ட் பாட்டு தான் - பாப்பா பாத்த சந்தோசத்துலே

சேதுக்கரசி said...

ஆகா.. இதை எங்கேயோ படிச்சமாதிரி இருக்கே :-) உங்க வலைப்பூவுக்கு வாழ்த்தகள்!

செல்விஷங்கர் said...

சேதுக்கரசி,

அங்கும் இங்கும் எழுதுபவர் ஒருவரே ! அங்கும் இங்கும் படித்தால் அப்படித் தான் இருக்கும்

வருகைக்கு நன்றி

நிலா said...

உங்கள கண்டுபிடிக்க குட்டீஸ்கார்னரில் ஒரு பதிவு போட இருந்தேன்.

அப்பாதான் தமிழ்மனம் நிலமை சரி இல்ல பாப்பு இப்ப வேணாம்னு சொல்லிட்டாரு.

எப்படியோ கண்டுபிடிச்சாசு பாட்டி.

ஆமா இந்தபாட்டு எனக்காகவா?

செல்விஷங்கர் said...

ஆமா ஆமா - பாப்பாக்குக் பாட்டுனாலே எல்லாப் பாப்பாக்களுக்கும் தான் - உன்னெ நான் நெரெய தடவெ பாத்துருக்கேன் - படத்துலே - எனக்குப் பிடிச்ச சிரிப்பு உன்னோடதும்.

சேதுக்கரசி said...

//அங்கும் இங்கும் படித்தால் அப்படித் தான் இருக்கும்//

அச்சச்சோ நான் சும்மா ஒரு ஜோக்குக்கு சொன்னேங்க, நீங்க வேற :-)

செல்விஷங்கர் said...

நானும் சும்மாத்தான் சொன்னேன் சேது

உதயதேவன் said...

இளகிய மனம், இசையின் சுகம், அனுபவ அறிவு.... ஆழுமை நிறைந்த மொழி.... மதுர(ரை) ம(ன)ணம்... உணர்வுகளும் ஆக்கமும்.... செல்விசங்கர்... வாழ்க தமிழ்...ச்செல்வி...

நன்றி! நன்றி! நன்றி!

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உதய தேவன்

NewBee said...

'பார்க்'-குல பார்த்த 'பாப்பா பாட்டு'
அருமை.

கடைசிக்கு முந்தின வரி வரை, பாப்பாவின் உற்சாகம்,

பிறகு, கேமரா அம்மா பக்கம் திரும்பி,'நச்'-ன்னு 'ஒரு அம்மாவின் தவிப்பு'

படம் நல்லா இருந்த்து செல்வி அம்மா. :)

மெளலி (மதுரையம்பதி) said...

பாட்டு சூப்பரா, சிம்பிளாயிருக்கு...:)

செல்விஷங்கர் said...

புது வண்டே

உனது திறமை பளிச்சிடுகிறது - பாடலை நன்கு உள்வாங்கி அதன் மையக் கருத்தைப் பிடித்து விட்டாயே

நல்வாழ்த்துகள்

செல்விஷங்கர் said...

மதுரையம்பதி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கோவை விஜய் said...

ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை