அன்பின் சக பதிவர்களே !!
தோழி நானானி மதுரை வருவதாக எங்க வீட்டு ரங்க்ஸ் சொன்னாங்க. நானும் உடனே கட்டாயம் சந்திக்க வேண்டுமெனக் கூறினேன். சென்ற முறை ரங்க்ஸ் மட்டும் சென்று, திருநெல்வேலி அல்வா சாப்பிட்டு விட்டு, ஒரு மணி நேரம் பேசியதாகக் கூறினார். பதிவு ஏதும் போட்டதாகத் தெரியவில்லை. இம்முறை நானும் சந்திக்க வேண்டுமெனக் கூறியதால் 25ம் தேதி காலை சென்று பேசிவிட்டு வந்து, அன்று மாலை சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விட்டு வந்தார். நானானியுடன் அவரது கணவரும் வந்திருந்தார்.
இச்சந்திப்பு பற்றிய எனது எண்ணங்கள் :
இந்தக்காலத்துச் சின்னப் பசங்க எல்லாம் பேசிப்பாங்கள்ள ! எங்க வூட்டுக்கு, "கெஸ்ட்" வந்துருக்காங்கன்னு - யாருன்னா "அத்தே!" ம்பாங்க. இப்போ அத்தைங்கற உறவெல்லாம் "கெஸ்ட்" ங்குற நிலைக்குப் போயிடிச்சி. அப்படித்தாங்க நாலு பேரு சந்திச்சாங்க மதுரயிலே ! அவங்க யாருன்னா - நானு, நானானி, எங்க வூட்டுக்காரரு, அவங்க வூட்டுக்காரரு ஆக நாலு பேர்.
பிள்ளைகள் சந்தித்தால் :
உனக்கு எப்போ ஸ்கூல் இல்ல காலேஜ் ?
நீ எப்ப டூர் போன ?
உனக்கு எந்த ஸ்டாரெப் பிடிக்கும் ?
யாரோட "சாங்க்" ரொம்ப இன்டெரெஸ்ட் ? ன்னு பேசுவாங்க.
ரொம்பச் சின்னவங்களா இருந்தா ஒருத்தரோட ஒருத்தர் விளையாடுவாங்க.
இளம் வயதினர் சந்தித்தால் :
தங்கள் கனவுகளைப் பேசுவார்கள் / காண்பார்கள்.
நடுத்தர் வயதினர் சந்தித்தால் :
குடும்பத்தை, குழந்தைகளை, செய்தொழிலைப் பற்றிப் பேசுவார்கள்.
பெரியவர்கள் சந்தித்தால் வாழ்க்கை பற்றிப் பேசுவார்கள்.
"நானானி" என்ற பெயரை நான் வலையில் பார்த்தபோது எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. எழுத்துகளைப் படித்த போது மேலோட்டமாக ஒரு எண்ணம் மிகுந்தது. நேரிடையாகப் பார்த்த போது மதிப்பு மிக்க ஒரு தோற்றம், அமைதிப் பொலிவு, இயல்பான சொற்கள் - இதழ் உதிர்த்த போது. இலக்கியம் கற்ற ஆற்றல் - இயற்கையை, சூழ்நிலையை, குடும்பத்தை, பிள்ளைகளை, பணியை, பாசத்தை பகிர்ந்து கொண்ட உரையாடல்.
அவர்கள் தங்கி இருந்த அறைக்கதவு தட்டப்பட்டதும், சிறிது நேர இடைவெளிக்குப் பின் கதவு திறந்தது. கண்களில் மகிழ்ச்சி - இதழ்களில் புன்னகை - அமைதித் தோற்றம் அளித்த நானானி எங்களை அன்புடன் வரவேற்றார்.அந்த நேரம் அவரது கணவர் நட்பினைப் பார்க்கச் சென்றிருந்தார்.
என்ன படித்தோம் - எங்கே படித்தோம் - எப்படிப் பணியாற்றினோம் - எவ்வளவு காலம் சென்னையில் வாழ்ந்தோம் - பிள்ளைகள் வளர்ந்து, படித்து பறவையாய்ப் பறந்தது வரை பேசினோம். பேரப் பிள்ளைகள் பேசி விளையாடுவது - அவர்களின் சூழ்நிலை எல்லாம் நினைவில் நின்றது.
வலைப்பதிவில் ஒருவருக்கொருவர் முகம் தெரியா விட்டாலும், அகமகிழ்ந்து பேசிக் கொள்வதைக் கூறி மகிழ்ந்தோம். பதிவர்களின் பதிவுகள் / பின்னூட்டங்கள் படித்தால் ஒரு அமைதி கிடைக்கிறது. எத்தனையோ வேலைகளுக்கிடையில், இரவு எவ்வளவு நேரமானாலும், அந்த வலைப் பூவினைப் படிக்கையில், உரையாடும் அன்பு வலை ஒரு உற்சாக ஊக்கி என்று பேசி மகிழ்ந்தோம்.
நட்பினைக் கண்டு வந்த நானானியின் கணவரும் எங்களுடன் உரையாடி மகிழ்ந்தார். நாடு - அரசு - அலுவல் - அயல்நாடுகள் என்று கருத்து வட்டம் விரிந்து பறந்து சென்று வலைக்குள் புகுந்தது. ஒரு நல்ல மாலைப் பொழுது இனிமையாய்ப் பறந்தது.
பெற்றவர் ஓரிடம்
பிள்ளைகள் ஓரிடம்
மற்றவர் ஓரிடம்
காலம் - கலாச்சாரம் மாறுகிறது
எதிர்காலம் எப்படி என்ற சிந்தனையுடன்
மாநாடு கலைந்தது.
செல்வி ஷங்கர்
------------------
நான் எனதருமைத் தோழி நானானியை அவரது எண்ணங்களை ஒரு பதிவாகப் போட வேண்டுகிறேன்.
செ ஷ
---------
Subscribe to:
Post Comments (Atom)
49 comments:
மக்களே கருத்துக் கூறுங்க !
ஏதோ சந்திப்பில் இருந்த உணர்வு வருகின்றது.... :)
//பெற்றவர் ஓரிடம்
பிள்ளைகள் ஓரிடம்
மற்றவர் ஓரிடம்
காலம் - கலாச்சாரம் மாறுகிறது
எதிர்காலம் எப்படி என்ற சிந்தனையுடன்//
இப்படியான உறவுகளின்று மாறுபட்ட நட்புகளின் சந்திப்புகளும் மகிழ்ச்சி பரிமாற்றங்களுடனும் எதிர்காலம் இனித்திருக்கும் :)
நல்லதொரு மகிழ்ச்சியான அனுபவத்தினை ப(திவு)கிர்ந்து கொண்டதற்கு நன்றிகளுடன்....!
//செல்விஷங்கர் said...
மக்களே கருத்துக் கூறுங்க !
//
இதோ வந்துட்டோம்.. :))
//வலைப்பதிவில் ஒருவருக்கொருவர் முகம் தெரியா விட்டாலும், அகமகிழ்ந்து பேசிக் கொள்வதைக் கூறி மகிழ்ந்தோம். //
:))
சத்தியமான வார்த்தைகள்.. பின்னூட்டத்துல நிறைய்ய வெளையாடிட்டு சில பேர நேரா பாக்குறப்ப என்ன பேசுறதுன்னே தெரியாம முழிச்சுட்டு எதுவுமே பேசாம(?!) கூட வந்துருக்கேன்.
//பெற்றவர் ஓரிடம்
பிள்ளைகள் ஓரிடம்
மற்றவர் ஓரிடம்
காலம் - கலாச்சாரம் மாறுகிறது
//
ஒண்ணியும் சொல்லிக்க முடியல....
கலாச்சாரம் மாறுகிறது..
/இளம் வயதினர் சந்தித்தால் :
தங்கள் கனவுகளைப் பேசுவார்கள் / காண்பார்கள்.
நடுத்தர் வயதினர் சந்தித்தால் :
குடும்பத்தை, குழந்தைகளை, செய்தொழிலைப் பற்றிப் பேசுவார்கள்.
பெரியவர்கள் சந்தித்தால் வாழ்க்கை பற்றிப் பேசுவார்கள்.//
நான் சந்திச்ச எந்த சந்திப்புலயும் இந்த மாதிரி ஒரு நிலைமை எனக்கு ஏற்படலை. (நல்லவேளை!) :))
//"வலைப்பதிவர் சந்திப்பு - மதுரை - 25.06.2008"//
ஏன் வேற மண்ணின் மைந்தர்கள் யாரையும் கூப்பிடலை :(
//சென்ற முறை ரங்க்ஸ் மட்டும் சென்று, திருநெல்வேலி அல்வா சாப்பிட்டு விட்டு, ஒரு மணி நேரம் பேசியதாகக் கூறினார். பதிவு ஏதும் போட்டதாகத் தெரியவில்லை.//
:(((
கடும் ஆட்சேபத்துக்குரியது. ஒரு பதிவுக்கு உள்ள விசயத்தை இழந்தது வெகு வருத்தமாக உள்ளது.
//"நானானி" என்ற பெயரை நான் வலையில் பார்த்தபோது எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.//
:)))
பெயரை வைத்து யாரையும் அனுமானிக்க முடியாது.
இந்த விசயத்தில் அதிகம் நொந்த குமாரன் நான் :((
சரி... இப்போதைக்கு இது போதும் பின்ன நான் வந்து பின்னூட்டம் கரெக்டா பப்ளிஷ் ஆயிருந்தா பார்த்துட்டு போவேன். ஓகேவா..
ஒரு கமெண்டு கூட மிஸ்(டர்ரு) ஆகக்கூடாது. சொல்லிப்புட்டேன்.
இதுலெல்லாம் நான் ரொம்ப கறாரு :))
இதை...இதை...நான் எதிர்பார்கவேயில்லை. எனக்கே எனக்காக ஒரு பதிவா? நெகிழ்ந்துமகிழ்ந்து போனேன்.
கட்டாயம் பதிவிடுகிறேன்..சகோதரி!!
எங்கே எனது பின்னூட்டங்கள் :(
//செல்விஷங்கர் said...
மக்களே கருத்துக் கூறுங்க !
//
:))
போன முறை திருநெல்வேலி அல்வா இந்த முறை என்ன சாப்பிட்டீங்க சொல்லவே இல்லையே.. ?? :))
தமிழ் பிரியன்,
ஆம் - உணர்வு வரவேண்டும் என்பது தான் பதிவின் நோக்கம்
ஆயில்யன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க வாங்க சென்ஷி
ஆம் உண்மை சென்ஷி = மறு மொழிகள் இடும் போது பதிவினை மட்டும் பார்த்து விட்டு இடுகிறோம். நேரில் சந்திக்கும் போது உணர்வுகள் பேசுவதைத் தடுக்கின்றன
கலாச்சாரம் மாறுகிறது என்ற கருத்துடன் உடன் படுகிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா - புரிய வில்லையே சென்ஷி
சென்ஷி
தாங்கள் கலந்து கொண்ட எந்த சந்திப்பிலும் இந்த நிலைமை ஏற்பட வில்லையெனில், தாங்கள் எந்தப் பிரிவினைச் சார்ந்தவர் ?
சென்ஷி,
இது தற்செயலான சந்திப்பு -ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு இல்லை. அதனால் மற்ற மண்ணின் மைந்தர்களைக் கூப்பிடவில்லை
சென்ஷி
- பதிவு போடாதது பற்றிக் கேட்க வேண்டியது எங்க வூட்டுக்காரரிடம் - என்னிடமல்ல
பெயரை வைத்து எதையும் தீர்மானிக்க முடியாது என்பது உண்மைதானே சென்ஷி
சென்ஷி
அத்தனை மறுமொழியினையும் பதிந்து பதில் மொழியும் இட்டு விட்டேன். சரி பார்த்துக் கொள்ளவும். சரியெனச் சான்றளிக்கவும். இல்லையெனில் நான் ரொம்ப பொல்லாதவ
சகோதரி நானானி
மனதில் தோன்றியது - எழுதினேன் - அவ்வளவுதான்
சென்ஷி
தங்களது மறு மொழிகள் அனைத்தும் இங்கே - சற்றே தாமதத்துடன்
கயல்விழி
சென்ற முறை அல்வா சாப்பிட்டது நான் அல்ல - எங்க வூட்டு ரங்க்ஸ். இப்போ காபி குடிச்சோம்ல
ஆஹா அற்புதம்.
ஆமா, மாநாட்டுல என்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ? அதைப் பற்றி ஒன்றும் சொல்லவேயில்ல .... :)))
சதங்கா,
மாநாட்டின் தீர்மானம் தான் பதிவின் கடைசியில் சொல்லப்பட்டிருக்கிறதே - இருப்பினும் தீர்மானத்தை உலகம் பூரா பரப்ப நம்ம கொ.ப.செ ( வேற யாரு நம்ம ரங்க்ஸ் தான்) கிட்டே கட்டளை இட்டிருக்கிறேன்
அட! இந்த அல்வா விஷயம் சொல்லவேயில்லை?
துளசி,
அல்வா விசயம் எனக்கே இப்பொழுது தான் தெரியும் - உங்க கிட்டே கூட சொல்லலியா -
//செல்விஷங்கர் said...
சென்ஷி
அத்தனை மறுமொழியினையும் பதிந்து பதில் மொழியும் இட்டு விட்டேன். சரி பார்த்துக் கொள்ளவும். சரியெனச் சான்றளிக்கவும். இல்லையெனில் நான் ரொம்ப பொல்லாதவ
//
இது சரி பார்த்து விட்டதற்கான சான்று பின்னூட்ட வகையைச் சாரும்..
(தப்பிச்சுட்டேனான்னு தெரியல :) )
சென்ஷி
தப்பிச்சுட்டீங்க
நன்றி
இனிமையானதொரு சந்திப்பினை பதிந்து பகிர்ந்து படிக்கும் என் போன்ற பதிவர் சந்திப்புகளையே கண்டிராதவர்களை(பதிவு பக்கம் வந்தே நான்கு மாதங்கள் தான் ஆகின்றன) ஏங்க வைக்கின்றீர்கள்:)
நல்லவரே
சந்திக்கலாமே - சக பதிவர்களை - தடை என்ன கூறுவீர் ? அங்கு அக்கம் பக்கத்தில் பதிவர்கள் இல்லையா ? சந்தியுங்கள்
//இயல்பான சொற்கள் - இதழ் உதிர்த்த போது.//
அவரது பதிவுகள் மலரும் போதும்தான்!
//இலக்கியம் கற்ற ஆற்றல் - இயற்கையை, சூழ்நிலையை, குடும்பத்தை, பிள்ளைகளை, பணியை, பாசத்தை பகிர்ந்து கொண்ட உரையாடல்.//
இது அனைத்தையும் அவரது வலைப்பூவும் பேசுகிறது. அவரது போன மாதப் பதிவாகிய "யானையின் பலம்..." பின்னூட்டங்களில் இதைப் பற்றிக் கூறியிருக்கிறேன்.
//இந்தக்காலத்துச் சின்னப் பசங்க எல்லாம் பேசிப்பாங்கள்ள ! எங்க வூட்டுக்கு, "கெஸ்ட்" வந்துருக்காங்கன்னு - யாருன்னா "அத்தே!" ம்பாங்க. இப்போ அத்தைங்கற உறவெல்லாம் "கெஸ்ட்" ங்குற நிலைக்குப் போயிடிச்சி.//
உண்மைதாங்க! அப்படியின்றி,
"உறவோடு விளையாடி
உறவோடு உறவாடி
உறவோடு ஒற்றுமையா
ஆட்டம் போட்டோமே"
["வெயிலோடு விளையாடி' பாட்டின் மெட்டு. சதங்கா பதிவின் பாதிப்பு எனக்கும் தொத்திக் கொண்டிருக்கிறது:)!}]
எப்போ எப்படி என என் நேற்றைய பதிவில் கூறியிருக்கிறேன். நேரமிருக்கையில் பாருங்கள் மேடம்!
http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post.html
//பெற்றவர் ஓரிடம்
பிள்ளைகள் ஓரிடம்//
US-ல் இருக்கும் எனது சிறிய தங்கை இரண்டுமூன்று வருடங்களுகொரு முறைதான் வர முடிகிறது. இந்த நீண்ட பிரிவு என் தாயாரால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
ராமலக்ஷ்மி
உண்மை உண்மை - நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை
நெல்லை சிவாவின் மயில் ஐடி தர இயலுமா
ராமலக்ஷ்மி - பாடல் அருமை - சதங்காவின் பாதிப்பா ? பரவாய் இல்லை. நல்வாழ்த்துகள்
ராமலக்ஷ்மி
அமெரிக்க நாட்டில் இருக்கும் தங்கையை அடிக்கடி வரச் சொல்லவும். இல்லை எனில் தாயை அங்கே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யவும்.
என்னோட பதிவர்கள் சந்திப்பு-பாருங்கள்
செல்வி! பதிவு போட்டுட்டேன்!!!
//ராமலக்ஷ்மி - பாடல் அருமை - சதங்காவின் பாதிப்பா ? பரவாய் இல்லை. நல்வாழ்த்துகள்//
பாடலாய் பாடியது சதங்காவின் பாதிப்புத்தான். ஆனால்
"உறவோடு விளையாடி
உறவோடு உறவாடி
உறவோடு ஒற்றுமையா
ஆட்டம் போட்டோமே"
என்கிற வரிகளை மெய்படுத்தும் விதமாக நாங்கள் வளர்ந்த விதத்தை 'திண்ணை நினைவு'களாகத் தந்திருக்கிறேன் என்பதைத்தான் கூற வந்தேன், மேடம்.
http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post.html
நேரம் கிடைக்கையில் பாருங்கள் மேடம்!
//அமெரிக்க நாட்டில் இருக்கும் தங்கையை அடிக்கடி வரச் சொல்லவும்.//
நீங்கள் சொல்லிய வேளை. மாத இறுதியில் வருகிறாள்.
// இல்லை எனில் தாயை அங்கே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யவும்.//
அவர்களுக்குத் தனது உடல் நிலை பிரயாணத்துக்கும், அங்குள்ள சீதோஷ்ணத்துக்கும் இடம் கொடுக்காது என்கிற மனக் கலக்கம்.
நானானி - பதிவு பாத்துட்டேன். நன்றி
திண்ணை பற்றிய நீண்ட பதிவினைப் பார்த்தேன் (பாக்கத்தானே சொன்னீங்க) - அப்புறமா நேரம் கிடைக்கையிலே படிக்கறேன்
ராமலக்ஷ்மி - நன்றி
ராமலக்ஷ்மி, தங்கை வருவது பற்றி மிக்க மக்ழ்ச்சி - தாயின் உடல்நிலைக்கு ஓவ்வாது எனில் அழைத்துச் செல்ல வேண்டாம். தாயை, தங்கையை விசாரித்ததாகக் கூறவும்
நன்றி
Post a Comment