இக்கதை வல்லிம்மாவின் இரண்டு வயது பேத்திக்காக எழுதியது.
------------------------------------------------------------------------------------
ஒரு காடு - கண்ணெ மூடிக்கோ - பிள்ளையார் சாமி கும்பிட்டுக்கோ - அப்பதான் கத வரும் - இப்ப கண்ணேத் தொறந்துகிட்டு கத கேளு.
அந்தக் காட்டிலெ ஒரு மல - அந்த மலயிலெ நெரெய மரம், நெரெய செடி - அங்கே மான், கொரங்கு, எல்லாம் ஓடி விளையாண்டுட்டு இருக்கும் - மரத்துலே பாத்தா இருட்டாத் தெரியும் - நெரெய குயில் கூட்டமா இருக்கும் - வெயில் வரப்போ இடமே இல்லாம காத்து அடிக்கும் போது - அந்த இலைக்கு நடுவுலே லைட் மாதிரி வெயிலு ஒரு கோடாட்டம் வெள்ளிச் சரிகை மாதிரி வரும்.
இந்தக் காட்டிலே - ஒரு பெரிய ராசா இருந்தாரு. அவரு வேட்டைக்குப் போவாரு - அவர் கூட துணைக்கு ஆளுக எல்லாம் போவாங்க ! ஒரு நா ராசா காட்டுலே வேட்டையாடி முடிச்சிட்டு - ரொம்பக் களைப்பா ஒரு மரத்தடியில தங்குனாரு.
அப்ப மழை வர மாதிரி காத்தடிச்சுது - மேகமெல்லாம் கருப்பாயிடிச்சி - இருட்டாப் போற மாதிரி குளிர் வேற இருந்திச்சி . அந்தக் காட்டுலே நெரெய மயிலு இருந்துச்சு - நீல மயில் வெள்ள மயிலுன்னு பல வண்ண மயிலுக இருந்திச்சி. அதுலே ஒரு பெரிய மயிலுக்கு குளிர் தாங்கலே ! - நடுங்கிகிட்டே தோகையே வேற விரிச்சிக்கிச்சி.
ராசா பாத்தாரு - பாவம் அந்த மயிலு - ரொம்பக் குளிருதே - இது என்ன செய்யும் - வயசான மயிலாச்சே - அப்படின்னு யோசிச்சுக்கிட்டே எழுந்து நடந்து போனாரு - அவரு தோளிலே போட்டிருந்த சரிகைத் துண்டே எடுத்தாரு - ராசால்ல - அது நல்ல பெரிய பளபளன்னு இருந்த பட்டு சால்வை - அது சும்மா மின்னிக்கிட்டு இருந்திச்சி - அத எடுத்து குளிர்லே நடுங்கற மயிலுக்கு இதமா போத்தி விட்டாரு - பாத்தியா - மயிலுக்கு பட்டுப் போர்வை கொடுத்த ராசாவெ !
நாமளும் யாருக்காச்சும் குளிர் எடுத்தா - நம்ம கிட்டே இருக்கற போர்வையெக் கொடுத்து உதவனும் - தெரிஞ்சுதா - ராசா தான் பெரிய ஆளுல்லே ! அவரு ஏன் நடந்து போய் போர்வை போத்தனும் ? யாரங்கே ? அந்த நடுங்கும் மயிலிற்கு ஒரு போர்வை போர்த்தி குளிரிலிருந்து மயிலைக் காத்திடுக ! அப்படின்னு கட்டளை இட்டிருக்கலாமில்லே ! - ஆனா அவரு உடனே போயி அவரே போத்தி விட்டாருல்ல - மயிலக் காப்பாத்தினாருல்ல - அது போல உதவி செய்யனும்னா நாமே செய்யனும் - அடுத்தவங்களே செய்யச் சொன்னா - அது வேற மாதிரிப் போயிரும்.
நல்ல புள்ளையா வளரனும் - நல்லவங்களோட பழகனும் - நல்ல பழக்க வழக்கங்களோட இருக்கனும் - அப்பா அம்மா தாத்தா பாட்டி சொல்றதக் கேட்டு நல்லவளா வளரனும் - சரியா !!!
உனக்கு ஒண்ணு தெரியுமா - எங்க பேத்தி சாமி கும்பிடும்போது - அப்பா. அம்மா, தாத்தா, பாட்டி, பாப்பா சொல்ற பேச்சக் கேக்கனும்னு சொல்லுவா. ஏன்னா - பாப்பா சொன்னா யாரு கேப்பா - அதனாலே நான் கேக்கறென்னு சொல்லுவா .
ம்ம்ம்ம் சரியா - வரட்டா
செல்வி ஷங்கர் - 06072008
Sunday, July 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
நண்பர்களே - கத எப்டி இருக்கு - சும்மா கருத்து சொல்லுங்க
கதை நல்லா இருந்தது! எனக்குன்னே சொன்ன மாதிரியும் இருந்தது!
நானும் குழந்தைதானே!
ஆண்டி! நிறைய கதை சொல்லுங்க! தினமும் வந்து சமர்த்தா கேக்குறேன்! சரியா!
மயில் கதை ரொம்ப நல்லாயிருக்குது. அப்படியே வாசிச்சா பாப்பாக்களுக்கு புரியற மாதிரி..
அதிலும் உங்க வீட்டுப் பாப்பா பண்ணும் பிரார்த்தனை ரொம்ப ரொம்பப் பிரமாதமா இருந்தது:))!.
வல்லிம்மா, வாசிச்சுக் காமிச்சுட்டு பேத்தி என்ன சொன்னான்னும் சொல்லுங்க:)!
எம் பேரன் நான் பூஜை பண்ணும்
போது, "சாமீ! காப்பாத்து!"ன்னு
கையிரண்டையும் கூப்பிட்டே ஓடிவருவான். பிறகு அவன் எங்க
எல்லோருக்கும் நெற்றியில் விபூதி வைத்துவிடுவான்.
//அம்மா, அப்பா, தாத்தா,பாட்டி எல்லாம் பாப்பா பேச்சை கேக்கணும்//
நல்ல பிரார்த்தனை!!
சும்மாவே அப்படித்தானிருக்கு.
அவன் உங்க கதயப் படிச்சா...?
சாமியே குழந்தை சொல்படித்தான் கேக்கும். அங்கே நம்ம பிரார்த்தனை
எடுபடுமா?
நாமக்கல் சிபி,
சமத்தா வந்து உக்காந்து சொன்ன பேச்சு கேட்டாத்தான் கத சொல்லுவேன். வந்து கேக்கலாம். சரியா
ராமலக்ஷ்மி,
பாப்பாக்குன்னே சொன்ன கதை அது
வருகைக்கு நன்றி
சுவாமிநாதன் கூறியதை சிவ பெருமான் கேட்க வில்லையா ? கை கட்டி வாய் பொத்தி மண்டியிட்டுக் கேட்க வில்லையா ? குழந்தைகள் சொல்வது தெய்வம் சொல்வது போல்.
நானானி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
என் பையன் is he not disturbing nature by doing this அப்படின்னு கேட்கறாம்மா!
//நல்ல புள்ளையா வளரனும் - நல்லவங்களோட பழகனும் - நல்ல பழக்க வழக்கங்களோட இருக்கனும் - அப்பா அம்மா தாத்தா பாட்டி சொல்றதக் கேட்டு நல்லவளா வளரனும் - சரியா !!//
நல்ல அறிவுரை..
செல்வி, ரொம்ப நன்றிம்மா.
அப்படியே முதல்ல பொஅடிச்சுக் காமிக்கிறேன். அடுத்தப்பல படியெடுத்து அங்க போயிச் சொல்றேன்.
நல்லா ஊம் கொட்டற மாதிரி கதை எழுதி இருக்கீங்க.
கண்ணுமுன்னால ராஜாவும் மயிலும் நிக்கறாங்க
அதோட நீதி போதனையும் இருக்கு.
உங்க பேத்திகள் கொடுத்துவைத்தவங்க:)
நன்றி நன்றி. மிக நன்றி.
இலவசக் கொத்தனார் - இக்காலப் பிள்ளைகளின் சிந்தனை வித்தியாசமனது. நல்வாழ்த்துகள். இதுதான் லாடரல் திங்கிங் என்பதோ
சஞ்ஜெய் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வல்லிம்மா, ஏதோ எழுதணுமுன்னு தோணிச்சி - எழுதிட்டேன் - பேத்திக்கு கதை சொல்லியே பொழுது போக்குறோம்ல
எங்கள் வீட்டருகே ஒரு பூட்டிய வீட்டு தோட்டத்தில் சில மயில்கள் வாடகையில்லாமல் வசிக்கின்றன. இங்கெல்லாம் குளிர சான்ஸே இல்லை. இப்போதும் சம்மர் மாதிரி வெயில். அதனால் போர்வை தேவையில்லை. தினமும் இரை தேடி அவை எங்கள் வீட்டிற்கும் வரும். என்பேத்திகளூடன் நானும் சேர்ந்து பொட்டுக்கடலை போடுவேன். நின்று அழகாக சாப்பிட்டுச் செல்லும். பேத்திகளுடன் கோவில் செல்கையில் அவர்கள் இருவரும் "சாமி காப்பத்தி" (காப்பாத்து) தாத்தா(வை) காப்பாத்தி என்று வணங்குவார்கள்.
சகாதேவன்
சகாதேவன்
மயிலென்றாலே அதற்கு குளிருமா - போர்வை தேவையா - பொட்டுக்கடலை திண்ணுமா - குழந்தைகள் எப்படி பிரார்த்தனை பண்ணுகிறார்கள் என்றெல்லாம் வித்தியாசமாகச் சிந்திக்கிறீர்களே !
நன்று - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நானு! நானு! நானும் சமத்து தான்.தெனம் 2 கதை வேணும்.:D
பாரி வள்ளல் கதை , நீதியோட.....சூப்பர்..
சொன்ன விதம் அருமை.ஆமா! கதை கேக்க வந்த குட்டிங்களுக்கு, மம்மம் எங்க?????????????...எனக்கு இப்பவே வேணும்...........ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
ஸ்ஸ்ஸ்ஸ்....மயிலுக்குப் போர்வை கொடுத்தது பேகன். பாரி கிடையாது...
ம்ம்ம்ம்...இவ்வளவு தூரம் மறந்து போச்சே....:((
பாரி கதை கூட ஞாபகம் இல்லைம்மா....ஒரு வாட்டி அந்தக் கதையும் சொல்லுங்களேன்.சமத்தா வந்து கேட்டுட்டுப் போறேன். :D :D
ஆஹா 'மயிலுக்குப் போர்வை தந்த பேகனின்' கதையை குழந்தைக்கு சொல்வது போல் சொன்னது அருமை. அருமை.
புது வண்டே !!
பாரியின் கதை தனிப் பதிவாக இடுகிறேன். இது பேகனின் கதை - உன் பிழை அடுத்த மறுமொழியில் சரி செய்யப்பட்டு விட்டதே- பரவாய் இல்லை...........
பாப்பாக்கு மம்மு நிச்சயம் உண்டு.
சதங்கா, குழந்தைக்கு கதை சொல்வது அவ்வளவு எளிதல்ல - அவர்களின் ஐயப்பாடுகள் அத்தனையையும் சமாளிக்க வேண்டும்
Post a Comment