Saturday, December 13, 2008

ஓய்வு !

கஞ்சி குடித்த
களைப்பில்
கட்டாந்தரையில்
தூக்கம் !
மடித்த கையே
தலையணை !
கண்ணில் உறக்கம்
கடல்போல் !
காத்திருந்தது
கட்டட வேலை !

9 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//காத்திருந்தது
கட்டட வேலை//


காசுபோட்டவனாய் இருப்பான்

ராமலக்ஷ்மி said...

//கஞ்சி குடித்த
களைப்பில்
கட்டாந்தரையில்
தூக்கம் !
மடித்த கையே
தலையணை !//

உழைத்துக் களைத்தவனுக்கு கிடைத்த இடத்தில்.. //மடித்த கையே தலையணை//யாய்.. கிடைக்கிறது உறக்கமும் ஒரு நொடியில். இது இறைவன் அவர்களுக்குத் தந்த வரம்.

//கண்ணில் உறக்கம்
கடல்போல் !//

பஞ்சணையிலும் பட்டு விரிப்பிலும் கிடைக்காதது.

அருமையான கவிதை.

தேவன் மாயம் said...

சின்ன கவிதை
சிறப்பாக உள்ளது!!!

தேவன் மாயம் said...

சின்ன கவிதை
சிறப்பாக உள்ளது!!!

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்

செல்விஷங்கர் said...

அன்பின் ராமலக்ஷ்மி

வருகைக்கு நன்றி

உழைப்பின் களைப்பும் ஓய்வும் மகிழ்வைத் தருவன.

நல்வாழ்த்துகள்

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவன்மயம்

நானானி said...

//கட்டாந்தரையில்
தூக்கம் !
மடித்த கையே
தலையணை !//
பஞ்சணையிலும் பட்டுமெத்தையிலும் கிடைக்காத தூக்கம் அங்கே படுத்ததும் கிடைக்கும். நச்சென்ற நல்ல கவிதை!!

செல்விஷங்கர் said...

அன்பின் நானானி

வருகைக்கும் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி