Sunday, November 9, 2008

வாழ்ந்து பார்க்க ........

அவளுக்கு வீடுதான் உலகம் !
வீதிகள் எல்லாம் பாலங்கள் !
அவள் வெளிஉலகை எட்டிப்பார்க்க !

அவளுக்குப் பிள்ளைகள்தான் எதிர்காலம் !
பேசும் சித்திரங்கள் பெருமைப்பட !

அவளுக்குக் கடமைதான் காவல் !
மூச்சுவிட மறக்காத முயற்சி !

அவளுக்கு அன்புதான் செல்வம் !
அனைவருக்கும் அள்ளிக்கொடுக்க !

அவளுக்கு அவன்தான் அனைத்தும் !
அரவணைக்கும் ஆக்கச் செயலில் !

அவளுக்கு அவளேதான் வரலாறு !
வாழ்ந்து பார்க்க ! வளர்த்துப் பார்க்க !!

5 comments:

செல்விஷங்கர் said...

சோதனை மறுமொழி

செல்விஷங்கர் said...

ராமலக்ஷ்மி said...
//அவளுக்கு வீடுதான் உலகம் !//

என ஆரம்பித்து அவள் வாழும் வாழ்வை அழகாய்ச் சொல்லி

//அவளுக்கு அவளேதான் வரலாறு !

வாழ்ந்து பார்க்க ! வளர்த்துப் பார்க்க !!//

என அற்புதமாய் முடித்திருக்கும் விதம் வெகு அருமை.

November 9, 2008 2:05 AM

செல்விஷங்கர் said...

அன்பின் ராமலக்ஷ்மி

பிளாக்கரின் சதி காரணமாக - நானே தங்களின் மறுமொழியை - மீள்பதிவிட்டேன்.

ஆம் ! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி

நானானி said...

//அவளுக்கு அவளேதான் வரலாறு//
உண்மைதான், செல்வி!
ஒவ்வொருவருக்கும் அவரவ்ர் வாழ்வே வரலாறு, புராணம், இதிகாசம், காவியம்
எல்லாமே!!

செல்விஷங்கர் said...

அன்பின் நானானி

ஆம் வாழ்வு வாழ்விலக்கியம் ஆகும் - அதில் வரலாறும் காவியமும் பூத்து மணம் பரப்பும் !