Saturday, November 3, 2007

காலம்

நம்மைக் கடந்து கொண்டே இருப்பது !
சில நேரம் நாம் அதைக் கடப்பது !
சுற்றுகின்ற முட்களுக்கு கடிகாரம் சிறை !
கடக்கின்ற நாட்களுக்கு இளமை சிறை !
கண்ணை மூடிக்கொண்டாலும் காலம் சுழலும் !
நம்மை இயக்கிக் கொண்டே ஞாலம் மாறும் !
எண்ணங்கள் எல்லாம் இறந்த காலங்களே !
எண்ணி முடிப்பதற்குள் அவை நம்மை கடக்கும் !
எதிர்காலம் எப்படியும் நம்மை நோக்கி நகரும் !
நிகழ்காலம் தான் நம் நினைவின் இலக்கு !
அதை நாம் நிறைவேற்றினால் மனச்சுமை குறையும் !
காலத்தால் அழியாத காவியங்கள் இயற்கை !
இன்னும் இளைஞர்களுக்கு அவை ஒரு சுவை !
கடற்கரை என்றைக்கும் மனச் சிறை தான் !
மலைச் சாரல் மகிழ்வின் ஊற்றே மனத்திற்கு !
காடுகள் நம் உள்ள ஏடுகளைப் புரட்டும் !
கனலும் நெருப்பும் காலத்தின் கைகள் !
பொழிகின்ற மழை விழிகளில் இறங்கும் திரை !
எந்தக் கவிஞனின் மனத் திரையிலும் மயிலாடும் !
செவியினில் இன்குயில் பாடும் ! எல்லாம்
இயற்கையின் கோலம் ! புள்ளி வைக்காமலேயே
புதிர் போடும் கோலங்கள் ! காலத்தின் சுவடுகள் !