என் பாக்களில் காணும் ஏக்கம்!
உன் எண்ணங்களால் வந்த தாக்கம்!
சுற்றி உள்ளவர்களைப் பார்த்தேன் ஆம்!
சுவர்போல் உணர்ந்தேன் அவர் பார்வையை!
மாறாதது உலகம் என்றார்கள்! இல்லை!
மாற்ற முடியாது இந்த மனிதர்களை!
சொல்வது போல் செய்ய வில்லையே!
சுயநலந்தான் சுற்றிச் சுற்றி வருகிறதே!
காசு கொடுத்தால் கூட கனிவாகப்பேச
காலநேரம் பார்ப்பர்! சொற்கள் சுடுகின்றனவே!
என்ன வந்து விடப் போகிறது!
இவர்களின் இன் முகப் பார்வையில்!
புரிய வில்லையே! இந்த புதிர்போடும்
மனிதர்க்கு! புன்னகைப் பூக்களைப் பூத்தாலென்ன!
புவி என்ன சாய்ந்தா போகும்!
அன்பாகச் செய்தால் அது பண்புதானே!
ஆலயம் சென்றா அறத்தைச் செய்யவேண்டும்!
மனமே மாபெரும் கோவில்! அங்கே
மாண்புறு எண்ணங்களே ஒளி விளக்கு!
மாறாத நினைவுகளே மாண்புடையான் வழிபாடு!
மாபெரும் உலகத்தை மண்ணில் வாழவிடுவோம்!
மாந்தருக்குள் அன்பு செய்வோம்! இங்கே
மழலையரை மாந்தர்களாய் ஆக்குவோம்! இனி
பூக்களில் உறங்கும் மவுனங்கள் போதும்!
புதுமலராய் புன்னகைப்போம்! புவிவாழ பூங்கா
வனம் அமைப்போம்! புதுமணம் பரவட்டும்!
பூக்கள் மலரட்டும்! பாக்கள் பேசட்டும்!
அதில் ஆக்குவோம் அன்பு வலையை!
செல்விஷங்கர்
22.12.2007
Saturday, December 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//இனி
பூக்களில் உறங்கும் மவுனங்கள் போதும்!//
ரெம்ப நல்லாயிருந்துச்சு ...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிறில் அலெக்ஸ்
//
ஆலயம் சென்றா அறத்தைச் செய்யவேண்டும்!
மனமே மாபெரும் கோவில்! அங்கே
மாண்புறு எண்ணங்களே ஒளி விளக்கு!
மாறாத நினைவுகளே மாண்புடையான் வழிபாடு!
//
- மிகவும் இரசித்தேன். அருமை
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதீஷ்
Post a Comment