எதார்த்தம் வாழ்க்கை என்றால்
எதிரி கூட பொறாமைப் படுவான்!
அப்படியொரு இயக்கம் வேண்டும்.
நாம் உறுதியோடு உழைத்தால்
வியர்வை கூட இனிக்கும்.
மனம் நெகிழ்ந்தால் மயக்கும் மழலை!
மாறுபாடு தெரியாது !
எண்ணங்களின் எதிரொலி வீட்டின்
சுவர்களில் கூட ஒலிக்க வேண்டும்!
உள்ளத்தின் தூய்மை உதட்டில்
ஒளி வீச வேண்டும்! உருக்கம்
உன் செயலால் வெளிப்பட வேண்டும்!
எதையும் பார்த்து ஏமாந்து விடக் கூடாது!
ஏக்கம் கூட வெளியே தெரியக் கூடாது!
அப்படியொரு அமைதி வேண்டும்.
அமைதி ஆயிரம் தரும்.
ஆரவாரம் அதிர்ச்சியை ஏறபடுத்தும்.
அழகுணர்ச்சி அன்பில் வெளிப்பட வேண்டும்.
ஆக்கம் கண்ட போது அது அன்புப்
பெருமூச்சாய் வெளிப்பட வேண்டும்.
வெற்றிகள் இயல்பானதாகவும்
தோல்விகள் நடைமுறைகளாகவும் தோன்றினால்
துன்பங்கள் நம்மைத் தூய்மைப்படுத்தும்.
தவிப்புகள் பார்வையால் உணர்த்தப்பட வேண்டும்.
அப்போதுதான் ஒரு பண்பான
வாழ்க்கையைப் பர்ர்க்க முடியும்.
இவை இறுக்கமான மனத்திற்கு இன்னிசையாகும்.
Wednesday, January 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//வெற்றிகள் இயல்பானதாகவும்
தோல்விகள் நடைமுறைகளாகவும் தோன்றினால்
துன்பங்கள் நம்மைத் தூய்மைப்படுத்தும்.//
இயல்பாக வந்து விழுந்த வார்த்தைகள்
இனிய ஏற்றத்திற்கு வழிகாட்டும்வரிகள்
சோர்வுற்ற பொழுதெல்லாம் படிக்கலாம்
சோதனைகள் எதிர்கொண்டு சிரிக்கலாம்
--வாழ்த்துக்கள்
//எண்ணங்களின் எதிரொலி வீட்டின்
சுவர்களில் கூட ஒலிக்க வேண்டும்!//
இந்த வரிகள் பிடித்திருந்தன.
நாம் எண்ணங்கள் யாருக்கும் தெரியாது என்ற எண்ணத்தினால் தான் என்னவெல்லாமோ மனதில் நினைக்கிறோம்.
எண்ணங்களில் எதிரொலி எங்கும் ஒலிக்குமென்றால் - நல்லதை மட்டுமே நினைப்போம்!
Fantastic!
வருகைக்கும் ரசனைக்கும் நன்றி ஜீவி அவர்களே - ஊக்கமூட்டும் மறுமொழி. நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவா
நன்றி அனானி
Post a Comment