காலம் ஒரே மாதிரி தான் ஒடுகிறது!
மக்கள் தான் மாறுகின்றனர்! எப்படி!
அதே இடம்! அதே செயல்!
ஆனால் மனிதர்கள் மாறுபட்டவர்கள்!
நினைத்தாலே இனிக்கின்றது நிகழ்வு!
இப்படியும் நடக்குமா? என்பதெல்லாம்
எப்படியும் ஒரு காலத்தில் நடக்கிறது!
நினைத்துப் பர்ர்க்க நேரமில்லா
ஒட்டம்! திரும்பினால் திருப்பு முனை!
கால ஒட்டத்தில் கரையேற நாம்
கடந்து வந்த பாதைகள் கவிதை
பாடுகின்றன! கடமையைச் செய்!
பயனை எதிர் பாராதே! இது கீதையின்
மொழி! இதைப் புரிந்து கொள்ள
எத்தனை காலங்கள்! விதிக்கப்
பட்டதை மாற்ற எவராலும் முடியாது!
இதுதான் இம்மொழியின் தத்துவம்!
இதை உணராத நம்மில் எத்தனை
மாற்றங்கள்! தடுமாற்றங்கள்!
தடுக்கி விழுந்ததற்குக் கூட காரணம்
அறியாத நாம் தவிப்பது ஏன்!
எப்போது உணர்வோம் இதனை?
எப்போது உணர்த்துவோம் உரிமையை?
உணர்ந்தால் உரையுங்கள்!
Saturday, January 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
சோதனை மறுமொழி
//எப்போது உணர்த்துவோம் உரிமையை?//
என்னாங்கோ !! = எந்த உரிமையை ?
யாருக்கு உணர்த்தப் போறீங்க ??
இரண்டு நாள் முன்னால் இந்த வலைப்பூ பார்த்தேன்...அருமையான கவிதைகள்...
கேள்விகள்..கேள்விகள்...கேட்டுக்
கொண்டே செல்கிறோம் வாழ்க்கை முழுவதும்..
நன்றி மலர், கேள்விகளுக்கு விடை தெரிந்து விட்டால் விளக்கங்கள் ஏன் ?
Post a Comment