Sunday, November 23, 2008

எண்ணங்கள் - வடிவங்கள்

இறை :
----------
இறைவா வா
குறைவே போ
நிறைவே எங்கும் !
---------------------------------

இடம் :
-----------
வீடு நிறைய
பொருள்கள் !
மனத்தில்
ஏனோ
வெற்றிடம் !
----------------------------------

பொருள் :
---------------
ஓடியபோது
ஒன்றுமில்லை !
நாடியபோது
காணவில்லை !
தேடிய பின்னோ
தேவையில்லை !
---------------------------

ஆசை :
-----------
ஆடிப்பாட
ஆசை !
ஓடிஓடி
நின்றபின் !
----------------------------------

மழலை :
-------------
அடுக்கி வைத்த
பொம்மைகள்
அழகாக !
அழாத
குழந்தைகளாய் !
-----------------------------------

இயற்கை :
-------------
ஆற்று நீரே
அடுக்கு மாடி
கழிவு நீரோடை !
ஆற்றல் மிகு
மனிதா !
மாற்றவேண்டும்
நிலைமை !
-----------------------------------
செல்வி ஷங்கர்
-----------------------------------

9 comments:

செல்விஷங்கர் said...

மக்களே ! கருத்துக் கூறுங்கள் !

ராமலக்ஷ்மி said...

சிந்தனையைச் செதுக்கியிருக்கிறீர்கள்.
இடமும் பொருளும் ஆசையும் அற்புதம்.

நானானி said...

//தேடிய பின்னோ
தேவையில்லை !//
பல சமயங்களில் இப்படித்தானிருக்கு..செல்விசங்கர்!

Noddykanna said...

"ஓடியபோது
ஒன்றுமில்லை !
நாடியபோது
காணவில்லை !
தேடிய பின்னோ
தேவையில்லை !"
-- ஆம் ஓடும்போதும், நாடும்போதும், காணாமல் வாட்டும், தேடிய பின் பயனில்லை! இது தான் இன்றைய மானுடத்தின் நிலை!
உண்மையான உணர்வு! அருமையான வெளிப்பாடு!வாழ்த்துகள்!

-- நாடிக்கண்ணா

செல்விஷங்கர் said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

செல்விஷங்கர் said...

ஆம் நானானி - என்ன செய்வது - பட்டறிவு தான் பாடமாய் வருகிறது

தேடிய பின் தேவை இல்லாமல் போகிறது

செல்விஷங்கர் said...

அன்பின் நாடிக்கண்ணா

பட்டறிவுப் பாடம் - படிக்கப் படிக்க நம்மை பாதையில் அழைத்துச் செல்லும். அதுதான் அதன் இயல்பு

நல்வாழ்த்துகள்

goma said...

குறும்பா அனைத்துமே அற்புதம்.சின்னச் சின்ன மணிகளை, சேர்த்துத் தொடுத்த, கருத்தைக் கவரும் கவிமாலை.

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமா