Thursday, May 14, 2009

சில நேரங்கள்

சில நேரங்கள்
சில நேரங்கள் தான் !
அருமையான பாட்டு !
அழகான பேச்சு !
ஆழமான கருத்து !
எளிதான வாழ்க்கை !
இனிமையான சிந்தனை !
எட்டிப் பார்க்கும் ஆசைகள் !
எண்ணிப் பார்க்கும் சில்லறை !
எப்போதும் வரும் மாதக் கடைசி !
எப்படியோ நிறைவான வாழ்க்கை !
வளர்ந்து விட்ட பிள்ளைகள் !
வழி தேடிய வாய்ப்புகள் !
காலூன்றிய காலங்கள் !
கதை பேசிய பொழுதுகள் !
கஞ்சி குடித்த நேரங்கள் !
காலில் சக்கரம்
கட்டிய கடமைகள் !
அடித்துப் போட்டாற் போல்
தூங்கிய நாட்கள் !
அனைத்தும் நினைவில் ! ஆம் !
சில நேரங்கள்
சில நேரங்கள் தான் !

செல்வி ஷங்கர்
-------------------------


3 comments:

செல்விஷங்கர் said...

சோதனை மறுமொழி

பாச மலர் / Paasa Malar said...

நல்ல அழகான கவிதை..

உங்களை 32 கேள்விகள் தொடருக்கு அழைத்திருக்கிறேன்..நேரமிருக்கும் போது அவசியம் பதிவிடவும்.

http://pettagam.blogspot.com/2009/06/32-32.html

செல்விஷங்கர் said...

அன்பின் பாசமலர்

நலமா

இங்கு சில நாட்களாக வர இயலவில்லை
அதனால் 32 கேள்விகள் பார்க்க வில்ல