Wednesday, December 30, 2009

குட்டி தேவதை

குட்டி தேவதை ! எந்தன்
குட்டி தேவதை !

எட்டி எட்டிப் பார்த்திடும் !
கட்டி முத்தம் தந்திடும் !

பட்டுப் போல படர்ந்திடும் !
விட்டில் போல விரைந்திடும் !

சின்னப் பாதம் தொட்டிட்டால்
கன்னங் குழிய சிரித்திடும் !

குறும்புப் பார்வை பார்த்திடும் !
கரும்பு போல சுவைத்திடும் !


குட்டி தேவதை ! எந்தன்
குட்டி தேவதை !

----------------

எங்கள் குட்டிப்பேத்தியுடன் சில நாட்கள் இருந்தபோது
மனத்தில் ஓடிய அடிகள் !

செல்வி ஷங்கர்

5 comments:

செல்விஷங்கர் said...

சோதனை மறுமொழி

ராமலக்ஷ்மி said...

//சின்னப் பாதம் தொட்டிட்டால்
கன்னங் குழிய சிரித்திடும் !//

அழகு.

குட்டி தேவதைக்கு என் வாழ்த்துக்கள்!

கார்த்திகைப் பாண்டியன் said...

புகைப்படம் போட்டிருக்கலாமே அம்மா.. நாங்களும் ரசித்திருப்போம் இல்லையா?

செல்விஷங்கர் said...

அன்பின் ராமலக்ஷ்மி

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

செல்விஷங்கர் said...

அன்பின் கார்த்தி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

படம் தானே வேண்டும் - வீட்டிற்கு வரும்போது பார்க்கலாமே

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்