Monday, October 14, 2013

நாம் சிரிக்கும் நாளே திருநாள் !

தலைப்பு : நாம் சிரிக்கும் நாளே திருநாள்  !

கன்னங் குழியச் சிரிக்கும் கவின் நிலவு
கைப் பிடித்து நடக்கின்ற குழந்தை !

வில்லாக வளைந்து விரல்வித்தை காட்டும் 
பள்ளிப் பருவத்து பசும்பொன் பதுமை ! 

கண்ணில் தெரிகின்ற வண்ணப் பாடல்கள் 
காதில் இனிக்கின்ற வளரிளம் பருவம் ! 

கணக்கீடு தவறாமல் கூட்டிக் கழிக்கும் 
கடும் உழைப்புக் காலங்கள் !

மனம் விட்டுப் பேசி வாய் விட்டுச் சிரித்து 
மகிழ்ந்திருக்கும் நேரங்கள் மனசுக்குள் மத்தாப்பு !

கண்ணெல்லாம் மகிழ கவின் படைப்பில் !
கருத்தெல்லாம் கசிந்துருகும் காவியங்கள் !  

சிந்தை எல்லாம் இனிக்கின்ற தீம்பாடல்கள் 
செவிகளிலே ஒலிக்கின்ற தேன் மொழிகள் ! 

ஒன்றாக ஒலிக்கும் ஒற்றுமைக் குரல்கள் 
நன்றாக வாழ்கின்ற நானில மக்கள் !

அன்பொன்றே பொருளாய் அகமுழுதும் 
மகிழ்கின்ற இல்லறப் பூங்கா ! 

இவரெல்லாம் நடமாடும் நானிலமே 
நமக்கு நல்வாழ்வுப் பூங்கா !

இவையெண்ணி !  நாமெல்லாம்  மனந்திறந்து
சிரிக்கும் நாளே நமக்குத் திருநாளாகும் ! 


செல்வி ஷங்கர்
14.10.2013 திங்கட்கிழமை 

12 comments:

செல்விஷங்கர் said...

அன்பின் நடுவர்களே !

பெயர் : செல்வி ஷங்கர்

மின்னஞ்சல் முகவரி : selvishankar06@gmail.com

தள முகவரி :
http://pattarivumpaadamum.blogspot.in/

தளத்தில் பதிவின் முகவரி :

http://pattarivumpaadamum.blogspot.in/2013/10/blog-post_14.html

மேற்கண்ட தகவல்கள் விதி முறைகளின் படி அனுப்பப் ப்டுகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள் மனதில் பூ பூத்தன... நடுவர்களுக்கு பகிர்வை அனுப்பி வைக்கிறேன்...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Anonymous said...

வணக்கம்
செல்விஷஙகர்.

உங்களின் கவிதை கிடைக்கப் பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு அறித்தருகிறேன்
போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சசிகலா said...

மனிதப்பருவங்களை அருமையாக வடித்த கவிதை வரிகள் சிறப்புங்க.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் அம்மா...

Ranjani Narayanan said...

ஒவ்வொரு பருவமாகச் சொல்லிக் கொண்டு வந்து இல்லற வாழ்வையும் சொல்லி, எல்லாப் பருவதத்திலும் மனமகிழ்ச்சியுடன் இருப்பதே தீபாவளி என்று வார்த்தைகளில் ஜாலம் செய்திருக்கும் உங்கள் கவிதை அற்புதம்!
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

Anonymous said...

வணக்கம்
தங்களின் கவிதை கிடைக்கப்பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு அறியத்தருகிறேன்.

போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சித்திரவீதிக்காரன் said...

சிரிக்கும் நாளே நன்னாள் என முடியும் வரிகள் அருமை.

Unknown said...

கவிதை அருமை போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

Unknown said...

கவிதை அருமை போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

Unknown said...

இனிய கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Iniya said...

நல்ல கவிவரிகள், கருத்துக்கள்
ரசித்தேன்...! தொடரவாழ்த்துக்கள்