Monday, October 20, 2008

சுமைகள் வேண்டாம் !

அருமைத் தோழி கயல்விழி முத்துலெட்சுமி என்னை ஒரு கதை - குறளின் அடிப்படையில் - எழுத அழைத்தார். அதன்படி இச்சிறு கதை ......

வேகமாகச் சென்று கொண்டிருந்த ராமு சற்றே மர நிழலில் ஒதுங்கினான். ஏதோ சிந்தனையில் வானத்தை நிமிர்ந்து பார்த்தான். வெயிலுமில்லை - மழையுமில்லை. ஆனால் காற்று வர மறுக்கின்ற ஒரு புழுக்கமான சூழ்நிலை. மனத்தின் இறுக்கமும் பெருமூச்சாய் வெளி வர, அந்தப் பேருந்து நிறுத்தத்தில், சிமிண்டாலான இருக்கையில் அமர்ந்தான்.

சுற்றுமுற்றும் கண்களை சுழல விட்டான். எல்லாரும் ஏதோ ஒரு வேகத்தில் பேருந்தில் ஏறுவதும் இறங்குவதுமாய் அந்தச் சாலை இயங்கிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் இராமுவின் மனமும் அசை போட்டுக்கொண்டே, அடுத்து தான் செல்ல வேண்டிய பேருந்தின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

ஆம் ! எப்படியாவது சொன்னதைச் செய்து விட வேண்டும் - ஒரு நாள் போல் நாளை பார்க்கலாம் ! அப்புறம் பார்க்கலாம் ! அவசரப் பட வேண்டாம் ! என்று எண்ணிக் கொண்டே வீட்டு வேலைகளை தள்ளிப் போட்டுக் கொண்டே போவது போதும். யார் தான் வீட்டில் இதை பொறுத்துக் கொள்வார்கள் ? ஒரு நாளா ? இரண்டு நாளா ? தினமூம் இப்படித்தான். பொறுமைக்கும் ஒரு அளவு வேண்டாமா ?

பிள்ளைகளூம் பேசாமலே எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தனர். ஏனோ ராமுவிற்கு வெளி வேலைகளில் இருந்த ஈடுபாடு வீட்டு வேலைகளில் அவ்வளவாக இல்லை. வீடும் நம்முடையது தானே ! அந்தந்த வேலைகளை அவ்வப்போதே செய்வோமே என்ற எண்ணம் மட்டும் எப்படியோ அவனுக்கு மறந்து போய் விடுகிறது. இதனால் அவ்வப்போது ஏறபடும் மனச்சுமையை அவன் சுமந்து தான் ஆக வேண்டி இருந்தது. வேலைகள் சுமையாகாமல் பார்த்துக் கொண்டால் நமக்குத் தானே நல்லது அப்பா ! என்று பிள்ளைகள் சொல்லியது இன்றைக்கென்னவோ ராமுவிற்கு பளிச்சென உறைத்தது ! அதனால் தான் வீட்டு வேலைகளைப் பார்க்க விரைந்து கொண்டிருக்கிறான் புத்துணர்வுடன்.

அதிகாரம் : தெரிந்து செயல் வகை

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

விளக்கம் : செய்யக்கூடாத செயல்களைச் செய்வதால் கேடு வரும். செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் இருப்பதாலும் கேடு வரும். எனவே எதனை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்று அறிந்து அதனை அப்போது அப்படியே செய்ய வேண்டும். செய்ல்களே வழிபாடல்லவா !

இப்பொழுது மூன்று பதிவர்களை நான் அழைக்க வேண்டுமாம். யாரை அழைப்பது - யாரை விடுவது ? வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு - விட்டு விடுகிறேன் பதிவர்களின் விருப்பத்திற்கு. யாரேனும் மூன்று பதிவர்கள் தொடரலாம். மறுமொழியில் விருப்பத்தைத் தெரிவித்தால் மகிழ்ச்சி அடைவேன்.

வருக ! வருக !! - கதைகள் தருக! தருக !!

விதிமுறைகள் : திருக்குறளின் கருத்தும் கதையின் கருத்தும் ஒன்றாக இருக்கவேண்டும். இன்னும் மூன்று பேரையாவது அழைத்து எழுத வைக்க வேண்டும்.

நல்வாழ்த்துகள்

செல்வி ஷங்கர்

22 comments:

செல்விஷங்கர் said...

அன்பின் பதிவர்களே !

படியுங்கள் - கருத்தினைச் சொல்லுங்கள்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அச்சச்சோ எனக்கு சொன்ன அறிவுரையாட்டம் இருக்கே.. நான் தான் வீட்டுவேலையெல்லாம் ஒழுங்காசெய்வது இல்லை.. :))

முதல்ல செய்யவேண்டியத கடைசியா கடைசியா செய்யவேண்டியத முதல்ல ..ஹ்ம்..மாத்திக்கனும்..

தருமி said...

//செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் இருப்பதாலும் கேடு வரும்.//

PROCRASTINATION ... இது உடம்போடு வளர்ந்த வியாதி எனக்கு. இனிமே எங்க மாறுவது?

பி.கு. இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் கூட நாளைக்குப் போடலாமேன்னுதான் முதலில் நினைத்தேன். சரி, ஐயன் சொன்னதுக்காக அப்டின்னு உடனே போட்டிருக்கேன்.
:-)

செல்விஷங்கர் said...

முத்துலட்சுமி

இது பொதுவாக எல்லோருக்கும் சொல்லப்பட்ட கதை. நாம் அனைவரும் ஒன்று தானே !

செல்விஷங்கர் said...

தருமி அண்ணே !

உடம்போட வளர்ந்த வியாதி இப்போ மாறிடுச்சே ! உடனே பதில் போட்டுட்டீங்களே !

சதங்கா (Sathanga) said...

//அச்சச்சோ எனக்கு சொன்ன அறிவுரையாட்டம் இருக்கே.. நான் தான் வீட்டுவேலையெல்லாம் ஒழுங்காசெய்வது இல்லை.. :))//

ரிப்பீட்டேய்.

அருமையான சிறுகதையும் கூட.

Noddykanna said...

செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பதும் கேடு தான் விளைவிக்கும் - உண்மை! உண்மை! முற்றிலும் உண்மை! - இது எல்லாருக்கும் பொருந்தும் பாடம்! - எடுத்துக்கொண்ட குறளும், சொன்ன கதையும் அருமை! வாழ்த்துகள்!

-- நாடிக்கண்ணா

செல்விஷங்கர் said...

நாடிக்கண்ணா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

செல்விஷங்கர் said...

சதங்கா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தருமி said...

//தருமி அண்ணே !

உடம்போட வளர்ந்த வியாதி இப்போ மாறிடுச்சே ! உடனே பதில் போட்டுட்டீங்களே !//

எல்லாம் ஒரு மரியாதைதான் - ஐயன் மேல்!!

செல்விஷங்கர் said...

தருமி அண்ணே !!

அய்யன் மேலே இவ்வளவு மரியாதையா ? இருக்கட்டும் இருக்கட்டும் !

தமிழ் பிரியன் said...

நான் ரூமைக் கூட சுத்தமா வச்சிக்கிறது இல்ல... இனியாவது சரியாக இருக்க முயற்சிக்கிறேன்... கதைக்கும், குறளுக்கும் நன்றி!

shanevel said...

அன்றன்று வேலைகளை அவ்வப்போது முடித்தல் என்பதை அழகாய் சொல்லியிருக்கீங்க...

பாத்தீங்களா... படிச்சதும் நான் விமர்சனம் பண்ணிட்டேன்..!

Gokulan said...

நல்ல முயற்சி..

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன்பிள்ளை தானா வளருமாம். இப்படித்தான் நம்ம பணி.

ஐயன் சொன்னதும் கருத்தில் கொள்ளுதல் முக்கியம் :)

சதங்கா (Sathanga) said...

நேரம் கிடைக்கையில் நானும் குறள் கதை முயற்சிக்கிறேன்.

செல்விஷங்கர் said...

அன்பின் தமிழ் பிரியன்

ஆமாமா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இனிமேயாச்சும் ரூமெல்லாம் சுத்தமா வச்சிக்கப்பா

வீட்டுத் தொலை பேசி எண் கொடு - வத்தலக்குண்டு எஸ்டிடி கோடு என்ன ?

செல்விஷங்கர் said...

அன்பின் வேல்

ஆமா அப்படித்தான் இருக்கணும் - அது தான் நல்லது - சுறு சுறுப்புக்கு நன்றி

செல்விஷங்கர் said...

அன்பின் வேல்

ஆமா அப்படித்தான் இருக்கணும் - அது தான் நல்லது - சுறு சுறுப்புக்கு நன்றி

செல்விஷங்கர் said...

அன்பின் கோகுலன்

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தல் நலமே ! ஐயன் சொன்னதையும் கவனத்தில் கொள்வோம்

செல்விஷங்கர் said...

சதங்கா

கதை எழுதுக - குறளின் அடிப்படையில் - நேரம் கிடைக்கும் போது அல்ல - நாம் தான் நேரத்தை ஒதுக்க வேண்டும் கதை எழுதுவதற்கு

சதங்கா (Sathanga) said...

கதை ரெடி. இங்க வந்து பாருங்க.

செல்விஷங்கர் said...

சதங்கா அங்கூ சென்று பார்த்து, படித்து, ரசித்து, மறுமொழி இட்டு வந்தாயிற்று. நல்வாழ்த்துகள்