Saturday, October 25, 2008

வளர்ச்சி என்பது வயதா ?

ஐந்து வயதில் ஆர்வம் இருந்தது
பத்து வயதில் பயம் வந்தது
பருவ வயதில் பதட்டம் எட்டிப்பார்த்தது
படிக்கின்ற வயதில் எதிர்காலமே
எண்ணத்தில் மிதந்து சென்றது !
போராடும் போட்டி உலகில்
நீந்தவே பொழுதுகள் சாய்ந்தன
வளர்ச்சி என்பது வயதா ?
இல்லை !
தோற்றத்தின் மாற்றமா ?
சூழ்நிலை புரிந்தது ! சுற்றமும்
நட்பும் விரிந்தது ! நினைவுகள்
நிழலாகின ! கட்டிப்போட்டால்
சுற்றுகின்ற காளைபோல்
கால்கள் கட்டுத்தறியில் !
வட்டத்துக்குள் சுற்றுகின்ற
வண்டியாயிற்று வாழ்க்கை !
ஆனாலும் அதிலோர் சுவை !
சுமைகள் எளிதானால் சுகந்தானே !
சுமையின்றிச் சுற்றும் உலகில்லை !
சுமக்க மறுப்பவர் எவரேனும் உளரோ ?

செல்வி ஷங்கர்

6 comments:

செல்விஷங்கர் said...

சோதனை மறுமொழி

ராமலக்ஷ்மி said...

//ஆனாலும் அதிலோர் சுவை !//

மறுப்பதற்கில்லை.

//சுமைகள் எளிதானால் சுகந்தானே !
சுமையின்றிச் சுற்றும் உலகில்லை !
சுமக்க மறுப்பவர் எவரேனும் உளரோ ? //

சுமைகள் என்றைக்கும் சுகம்தான். அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். புதுவண்டை நானும் வழிமொழிகிறேன்:
"அடிக்கடி..அதுவும் நிறைய எழுதுங்கள்"

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Raajaguru said...

வளர்ச்சி என்பது வயதா ?
இல்லை !
தோற்றத்தின் மாற்றமா ?

இந்த வரிகளைப் படித்தவுடன்,

"ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்ட வளர்ச்சி" என்ற பட்டுக்கோட்டையின் பாடல் நினைவிற்கு வந்தது.

செல்விஷங்கர் said...

அன்பின் ராமலக்ஷ்மி,

வருகைக்கும் கருத்துக்கும் வேண்டுகோளுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

செல்விஷங்கர் said...

ராஜகுரு,

அறிவும் ஆளுடன் சேர்ந்து வளர வேண்டும் - அது தான் வளர்ச்சி - இது பட்டுக்கோட்டையாரின் பாடல்.

மறுக்க வில்லை. இப்பாடல் வளரும் பருவத்தினருக்குச் சொன்ன அறிவுரை.

வளர்ந்தவர்க்கு .........

Raajaguru said...

நான் தங்கள் கருத்தை மறுக்கவே இல்லை.
எனக்கு அது சரியாகவே புரிந்தது.

தங்களின் இந்தக் கவிதையைப் படித்தவுடன் பட்டுக்கோட்டையின் அந்தப் பாடல் நினைவிற்கு வந்தது என்றுதான் சொன்னேன்.