இப்பதிவு இவ்வலைப்பூவினில் ஐம்பதாவது பதிவாக வெளி வருகிறது.
-------------------------------------------------------------------------------------------
அமைதிப் பூங்கா அதிர்கிறது !
அறிவியல் வளர்ச்சி சிதர்கிறது !
வளரும் நாட்டின் வளர்ச்சி
தீவரவாத சிந்தையின் சிதையில் !
கதறும் ஓலம் - தகரும் கட்டிடம் !
பற்றும் நெருப்பில் பரிதவிப்பு !
சுட்டு வீழும் உடல்கள் !
உலுக்கும் சீர்குலைவு !
கொதிக்கும் உள்ளம் !
குமுறும் நெஞ்சம் !
சிந்தும் கண்ணீர் !
ஏனிந்த அழிவு ?
எதற்கு இந்தக் குலைவு ?
குண்டு வெடிப்புகள் தருமா குவலயந்தன்னை ?
மடிபவன் மனிதன் !
மடியச் செய்பவன் மனிதன் !
உயிரைக் கொன்று
உடைமைகள் அழித்தால்
உயர்வு வருமா ?
உள்ளம் நிலைக்குமா ?
மனித நேயம் மடியலாமா மண்ணில் ?
ஒருவன் வளர்ச்சி மற்றவன் அழிவிலா ?
சிந்தித்தால் சிந்தை குலையுமே !
யார் புகட்டுவது அன்பு மனப்பான்மையை ?
வன்னெஞ்சங்களே - வாழ விடுங்கள் வையத்தை !!!
--------------------------------------------------------------
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
தீவிரவாதத்தைக் தீர்க்கவே கவிதை - கருத்துக் கூறுங்கள்.
தங்கள் ஐம்பதாவது பதிவு அமைதிக்காகக் குரல் கொடுக்கும் உன்னத நோக்கத்துடன் உள்ளம் குமுறியிருக்கிறது.
//மடிபவன் மனிதன் !
மடியச் செய்பவன் மனிதன் !
உயிரைக் கொன்று
உடைமைகள் அழித்தால்
உயர்வு வருமா ?
உள்ளம் நிலைக்குமா ?
மனித நேயம் மடியலாமா மண்ணில் ?
ஒருவன் வளர்ச்சி மற்றவன் அழிவிலா ?//
இதையெல்லாம் சிந்திக்கும் திறனை தீவிரவாதிகளுக்கு ஆண்டவன் அளித்திட பிரார்திப்போம்.
வளரத்துடிக்கும் நாட்டில் தினசரி வாழ்க்கைப் போராட்டத்தினிடையே, சராசரி மனிதன் அறியான் மதவாதமும், இனபேதமும்! அவன் சூழலில், அக்கம் பக்கம் எல்லாம் அவன் உடன்பிறப்பே!
ஒரு சிலக் கரும்புள்ளிக் களைகள் உலகையே அழிக்கத்தொடங்கியுள்ளன!
இவர்களை அடையாளம் கண்டு வேரருக்க விளங்கவில்லை ஒரு திசையும்... படைத்தவன் தான் அவதரித்து பாரைக் காக்க வேண்டும்!
வருந்துகிறது மனம்...
-- நாடிக்கண்ணா
ராமலக்ஷ்மி
தீவிரவாதம் எதற்காக - வளர்ச்சியை அழிப்பதற்கா ? வாழ்ந்தவர் நாட்டைக் காக்க புல்லுருவிகள் மறுப்பதேன் ? நினைத்தால் நெஞ்சம் நெருப்பாகிறது
நாடிக்கண்ணா
நாடு வளர நாமெல்லாம் நினைத்தால் நல்ல நினைவுகள் நாட்டைக் காப்பாற்றும்.
வளரும் இந்தியா வளர்ச்சியுற நல்ல தலைமைகள் நமக்கு வழி காட்டட்டும்.
நாட்டு நலனே நம் சிந்தனை ஆகட்டும்
நல்வாழ்த்துகள்
/*மனித நேயம் மடியலாமா மண்ணில் ?
ஒருவன் வளர்ச்சி மற்றவன் அழிவிலா ?
சிந்தித்தால் சிந்தை குலையுமே !
யார் புகட்டுவது அன்பு மனப்பான்மையை ?
வன்னெஞ்சங்களே - வாழ விடுங்கள் வையத்தை*/
எல்லோர் மனதிலும் எரியும் நெருப்பு? விடை சொல்லத்தான் யாருமில்லை. நம்மால் முடிந்தது , பிரார்த்தனைகளும், முடிந்த அளவு நம் சூழ்நிலையில் அன்பை வளர்க்கும் முறைகளும் தான்
அமுதா,
கொடுமைகளை அழிக்க போராட்டங்களைப் போக்க
நல்ல மனங்களைப் பெறுவோம்
மனத்தால் இறைவனை வேண்டுவோம்
மக்களை நல்வழிப் படுத்துவோம் !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment