Friday, December 12, 2008

ஒரு மழைக்கால மாலை !!!

ஒரு மழைக்கால மாலைப் பொழுதில், எங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று சுற்று முற்றும் பார்த்த போது மனத்தில் தோன்றிய கவிதை.

ஒரு பக்கம் - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள்
மறு பக்கம் வைகையாற்றுப் பாலம்
இடையே எங்கள் அடுக்கு மாடிக் கட்டடங்கள்

நான்காம் மாடியில் நடந்த கட்டட வேலைக்கு
கீழ்த்தளத்திலிருந்த மணல் அனைத்தும் நொடியில்
மேலே கொண்டு செல்லப்பட்டது.

இவை அனைத்தையும் கண்ட கண்களின் காட்சி இது.
----------------------------------------------------------------------
சூழ்ந்த மேகங்கள்
தவழும் கோபுரங்கள்
சுற்றிலும் மரங்கள்
வீசிடும் காற்று
சுழன்றிடும் சூழல் !

பளிச்சென்ற கட்டிடங்கள்
பார்க்கவே அழகாய் !
கோடு போட்டாற்போல்
பாலம் ! அதிலே
புள்ளிகளாய் மக்கள் !
போகின்ற பேருந்துகள் !

கொட்டிக் கிடந்த
மணலெல்லாம்
குவியல் குவியலாய்
மாடித்தளத்தில் !
மனிதனின் உழைப்பு !

ஆற்றோரப் பாலம்
அங்கே வண்டிகளின்
பேரிரைச்சல் !

போவோர்
வருவோர்
எல்லாம்
ஓரத்தில் !
--------------------------------
செல்வி ஷங்கர்

17 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒரு பக்கம் - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள்
மறு பக்கம் வைகையாற்றுப் பாலம்
இடையே எங்கள் அடுக்கு மாடிக் கட்டடங்கள்//



காடியே ஒரு கவிடையாய்.........

SUREஷ்(பழனியிலிருந்து) said...

போவோர்
வருவோர்
எல்லாம்
ஓரத்தில் !
--------------------


சமுதாயம்.............

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேSH

Noddykanna said...

கண் முன்னே விரியுது, கவிதை காட்சியாய்! அருமை! அருமை! கோடு போல பாலம், மிகச்சரி! வாழ்த்துகள்!

-- நாடிக்கண்ணா

சந்தனமுல்லை said...

நல்ல பார்வை!!

சதங்கா (Sathanga) said...

ந்த சூழலை அப்படியே கண்முன் கொண்டுவருகிறது உங்கள் வரிகள். வாழ்த்துக்கள்.

செல்விஷங்கர் said...

அன்பின் நாடிக்கண்ணா

கண்ணில் படும் காட்சிகள் சில நேரம் கவிதையாய் வருவதுண்டு - அதுவும் ஒரு அழகுதானே !

நல்வாழ்த்துகள்

செல்விஷங்கர் said...

அன்பின் சந்தன முல்லை

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

செல்விஷங்கர் said...

அன்பின் சதங்கா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள்

துளசி கோபால் said...

//ஒரு பக்கம் - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள்...//

ஆஹா..... கோபுர தரிசனம்.கோடி புண்ணியம்.

Divya said...

காட்சிகளை கண் முன் நிறுத்துகின்றன வரிகள், அருமை!!

செல்விஷங்கர் said...

வாங்க வாங்க துளசி - மதுரைக்கு வாங்க - கோடி புண்ணியம் சம்பாதிக்கலாம்

நன்றி வருகைக்கு துளசி

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திவ்யா

நானானி said...

மாடிதான் மொட்டை ஆனால் கண்ட காட்சிகளெல்லாம் கண்களுக்கு நிறைவு!

அங்கிருந்தே மீனாட்சி தரிசனம்!!!தினம்..தினம்!!

செல்விஷங்கர் said...

அன்பின் நானானி

ஆம் - மொட்டை மாடி தான் பலருக்குப் போதி மரம் - தினந்தினம் கோபுர தரிசனம் - திவ்யம்தான்

Thamiz Priyan said...

நல்ல வர்ணனை! கவிதை காட்சிகளாய் விரிந்து விட்டது.

செல்விஷங்கர் said...

அன்பின் தமிழ் பிரியன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இயற்கை வர்ணனை எவர்க்கும் இனிக்குமன்றோ