மழையில் குடையாய்
வெயிலில் நிழலாய்
நினைவில் நிகழ்வாய்
சோதனையில் வழியாய்
சாதனையில் மகிழ்வாய்
போதனையில் பொறுப்பாய்
பாதையில் பலமாய்
தேவையில் நினைவாய்
செயலில் பொருளாய்
ஆற்றிய கடமை
அருமை மக்களாய்
அவிழரும்பானதே !
மணக்கும் மணத்தை
மலரில் அடக்கிய
மலர்ப்பந்தலாய்
மனத்தை மயக்கிய
மலர்களே !
மாற்றம் ஏனோ ?
மலர்களே ! மலர்களே!
குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை !
சிறியோர் எல்லாம்
சிறியரும் அல்லர் !
பெரியோர் எல்லாம்
பெரியரும் அல்லர் !
செயலால் உயர்க !
செல்வங்களே !!
-----------------------------------------
செல்வி ஷங்கர்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
தென்றல் புயலாய் மாறியது ஏனோ ! புரிதல் சற்றே குறைந்ததனாலோ !
விடை பகருங்களேன் ..........
சிறியோர் எல்லாம்
சிறியரும் அல்லர் !
பெரியோர் எல்லாம்
பெரியரும் அல்லர் !
செயலால் உயர்க !
செல்வங்களே !!//
வருகைக்கு நன்றி கமல்
//
சிறியோர் எல்லாம்
சிறியரும் அல்லர் !
பெரியோர் எல்லாம்
பெரியரும் அல்லர் !
செயலால் உயர்க !
செல்வங்களே !!//
மிக மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
உங்கள் எண்ணங்களில் உதித்த கருத்துக்கள்...ஆதங்கங்கள் சேர்வோரை சென்றடையட்டும்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி
அன்பின் நானாஇ,
வருகைக்கு நன்றி
நீங்கள் ஒருவர் தான் சரியான புரிதலில் - பார்வைக் கண்ணோட்டத்தில் செலுத்தி உள்ளீர்கள்.
செய்தி சென்று சேர்ந்து விட்டது.
இனிய மறு மொழியும் கிடைத்து விட்டது
Post a Comment