உதித்தான் கதிரவன் கிழக்கில்
உயிர்த்தெழுந்தது உலகம் !
ஒளியைப் பதித்தான் எங்கும்
விழியைப் பெற்றது உலகு !
வளியை வளைத்தது வானம் !
வனத்தை வளர்த்தது உன்னொளி !
வானம் எங்கும் ஊர்ந்தாய் !
மானம் காக்க மனிதன்
மாண்புறு தொழில் செய்தான்.
உதய சூரியனே நீ
நாளும் உதிக்கின்றாய் !
உன்னத உலகை
ஒளியால் படைக்கின்றாய் !
உன்னை யார் கேட்டார்
உதியென்று ?
ஒழுங்காய் ஒளி பரப்ப
யார் பணித்தார் ?
ஏனென்று கேட்பார்
இல்லையே ! இருந்தும்
செய்கின்றாய் கடமையை !
நேரத்தில் செய்கின்றாய் !
காலத்தில் சிறக்கின்றாய் !
தட்டிக் கொடுப்பார் இல்லை !
தட்டிக் கேட்பார் இல்லை !
தானே செய்கின்றாய் !
சரியாய்ச் செய்கின்றாய் !
உலகம் படிக்குமா பாடம் உன்னிடம் !!!
Wednesday, December 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
பாடம் படித்தால் சொல்லுங்களேன்
//ஒழுங்காய் ஒளி பரப்ப
யார் பணித்தார் ?
ஏனென்று கேட்பார்
இல்லையே ! இருந்தும்
செய்கின்றாய் கடமையை !
நேரத்தில் செய்கின்றாய் !
காலத்தில் சிறக்கின்றாய் !
தட்டிக் கொடுப்பார் இல்லை !
தட்டிக் கேட்பார் இல்லை !
தானே செய்கின்றாய் !
சரியாய்ச் செய்கின்றாய் !//
எவ்வளவு அழகாய் எடுத்துரைத்திருக்கிறீர்கள்! வெகு அருமை.
//உலகம் படிக்குமா பாடம் உன்னிடம்!!!//
நாங்கள் படிக்கிறோம் பாடம் சூரியனிடமிருந்து மட்டுமல்ல; சுவைபடச் சொல்லித் தரும்
உங்களிடமிருந்தும், நன்றி!!!
அன்பின் ராமலக்ஷ்மி
நன்றி - வருகைக்கும் கருத்துக்கும்
படித்தால் தான் பாரில் உயர முடியும்.
நல்வாழ்த்துகள்
காலம் உள்ளவரை
கற்றுக்கொள்ள
கணக்கற்றவை உள்ளது
என்பதை உணர்த்தின
உங்களின் வரிகள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திகழ் மிளிர்
Post a Comment