Friday, May 1, 2009

பட்டாம் பூச்சி

எப்போதாவது எட்டிப்பார்க்கின்ற எனக்கு பட்டுப்போன்ற பட்டாம்பூச்சி விருதா என்று வியந்தேன். சரி சரி யாராவது பாராட்டினால் ஏன் பதுங்க வேண்டும், பட்டாம் பூச்சி போல் சிறகடித்துப் பறப்போமே என்று மகிழ்ந்தேன் !

மென்மையான சிறகுகள் - வண்ண வண்ணக் கோலங்கள் - யார் வரைந்து வைத்தது அதன் முதுகில் என்று நான் வியந்ததுண்டு. கூட்டுப்புழு குளிர்ந்த வண்ணத்தில் சிறகு முளைத்து வெளிவரும் முயற்சியை நான் நம்பிக்கை மொழிகளாய் நினைத்ததுண்டு. நம்பிக்கை தானே நம் வெற்றி.

வெற்றியையும் பாராட்டையும் பகிர்ந்து கொள்வது தானே பசுமைத் தமிழின் பாங்கு. அப்பாங்கை தமிழ் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் பெற்ற இன்பம் பெறுக வையகம்.

எனக்கு இப்பெருமையை அளித்த தோழி மதுமிதாவிற்கு வாழ்த்துகள் -பாராட்டுகள்.

இப்பொழுது தொடர் செயலாக பட்டாம்பூச்சி விருதினை அருமைத்தோழிகள் - நானானி- துளசி மற்றும் பாசமலர் ஆகிய மூவர்க்கும் வழங்குகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மூன்று பதிவர்களின் இடுகைகள் பலவற்றை எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றன. துளசி பார்க்காத துறையே இல்லை. நானானி நன்றாகச் சிந்தித்தூ சிறு கருத்தைக் கூட செம்மையாய்ப் பாதியும் திறமை வாய்ந்தவர். பாசமலர் பன்மொழிச் சிறப்புடன் பதிவுகள் தருபவர். கவிதைகள் எம்மொழியிலும் கரையைத் தொடும்.

விருது பெற்ற மூவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்

விதி முறைகள் :

இந்த விருது - ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக்கிட்டு போறது போல - அதனால, பின்பற்றவேண்டிய சில விதி முறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)அதனால மூணுபேருமே என்னைப்போல தாமதிக்காமல் பட்டாம்பூச்சி போல பறந்து பறந்து விருதைக் கொடுத்துடுங்க:)

வணக்கம்.

செல்வி ஷங்கர்


20 comments:

cheena (சீனா) said...

வாழ்த்துகள் - வாங்கிய உடனே மற்றவர்க்குக் கொடுத்த வேகம் பிரமிக்க வைக்கிறது - நல்வாழ்த்துகள்

சதங்கா (Sathanga) said...

//வாழ்த்துகள் - வாங்கிய உடனே மற்றவர்க்குக் கொடுத்த வேகம் பிரமிக்க வைக்கிறது - நல்வாழ்த்துகள்//

அதே ! அதே !!

தருமி said...

புதுப் பட்டாம்பூச்சிக்கு
வாழ்த்துக்கள்.

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதங்கா

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தருமி

shanevel said...

கொடுப்பதற்கு தயங்காத நீங்கள், இதற்கா தயங்குவீங்க. விருது வாங்கினதுக்கு மிக்க மகிழ்ச்சி அம்மா..!

துளசி கோபால் said...

நன்றி செல்வி ஷங்கர்.

ஏற்கெனவே கிடைச்சதுகளைப் பறக்க விட்டுட்டேன். இதையாவது காப்பாத்தி வச்சுக்கலாமான்னு தோணுது.

வெற்றிபெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

இதுவரை வாங்காதவங்க பட்டியல் ஒன்னு கிடைச்சாத் தேவலைன்னு இருக்கு.

மீறான் அன்வர் said...

நல்வாழ்த்துகள்
புதுப் பட்டாம்பூச்சிக்கு :)

செல்விஷங்கர் said...

வருகைக்கும் மகிழ்ச்சிக்கும் நன்றி வேல்

செல்விஷங்கர் said...

அன்பின் துளசி

பட்டாம்பூச்சிய பறக்க விடாமே வைச்சுக்கிட்டதுக்கு ந்ன்னி - சேரியா

லிஸ்ட் - ம்ம்ம்ம்ம்ம் -

செல்விஷங்கர் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மீறான் அன்வர்

செல்விஷங்கர் said...

வாழ்த்துக்கு வருகைக்கும் நன்றி திகழ்மிளிர்

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள்.

மிக்க நன்றி மேடம்.

செல்விஷங்கர் said...

பாசமலர் - வரூகைகு நன்றி

நானானி said...

இன்றுதான் பார்த்தேன். மனசு படபடவென்று சந்தோஷ சிறகடித்துப் பறக்கிறது. நன்றி!!செல்வி சங்கர்!!

தேவன் மாயம் said...

பட்டாம்பூச்சி விருதுக்கு ட்ரீட் இல்லையா?
அன்றைக்கு சமைக்காமல் ஏமாத்திட்டீங்க!!

செல்விஷங்கர் said...

அன்பின் நானானி

மகிழ்ச்சியின் உச்சமே - சிறகடித்துப் பறப்பது தானே

செல்விஷங்கர் said...

தேவா

எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் - சாப்பாடு - சமைத்த சாப்பாடு தயார் செய்திடுவோம்

நானானி said...

செல்வி!
'நன்னி' துள்சி ஓடது, 'சேரியா' யே ஓடது. சேரியா?

துளசி கோபால் said...

ஆஹா....நாடு திரும்பியாச்சா செல்வி?