சிந்தனை கலைத்தது !
சன்னல் திரையை
சற்றே விலக்கி
எட்டிப் பார்த்தது !
எப்படி இந்த
ஒளி மின்னல்
ஓவியம் வரைந்தது
போல் வந்தது !
காற்று வரும்
வழியே நேற்று
வந்தது தானே
என்று நினைத்தேன் !
பார்வையில் பட்டதும்
பாசப் புன்னகை
பூத்தது ! வான்பூ !
ஆம் !
அன்றும் இன்றும்
அதே நிலவுதான் !
ஆனாலும் அதுபுதுமை !
அதுதான் இயற்கை !
2 comments:
சிந்தனை கலைத்த சித்திரை நிலவை சிலாகித்துப் பாடியிருக்கும் விதம் அருமை.
நிலவு மட்டுமா அழகு? 'வான்பூ' எனும் வர்ணனையும் வெகு அழகு.
அன்பின் ராமலக்ஷ்மி
சித்திரை நிலவெந்தன் சிந்தனை கலைத்தது உண்மை
வான்பூ என்ற சொல் எனக்கு உண்மையிலேயே பிடித்தது
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி
Post a Comment