ஏழு மாதமே ஆன எங்கள் பேத்தியின் அருகில் இருந்த போது தோன்றிய சிந்தனைகள்
-------------------------------------------------------------------------------
சின்னக் குழந்தையைப் பார்க்கையில் அதிலோர் மகிழ்வு !
அதன் புன்னகை தவழும் கன்னக்குழியை நோக்குகையில் அகிலமே நம் காலடியில் !
கையணைத்து, காலுதைத்து, கண்கள் நோக்கி, சிரிக்கையில் நம் இதயமே மென்மலர் ஆகிறது !
கற்றைக்குழல் கைகளில் பிடித்து கன்னம் ததும்பப் பார்க்கையில் படைப்புகளே நமக்காகத்தான் என்று எண்ணத் தோன்றுகிறது !
கை தட்டு ! கை தட்டு ! என்ற உடன் அந்த சின்னஞ்சிறு விரல்கள் நீள, காற்றெனத் தட்டும் ஒலி ! அப்ப்ப்ப்பா !
தென்றலுக்கு எப்படி இந்த மென்மை வந்தது !
தவழவே தெரியாத தளிர்க் கால்கள் உதைக்க 'பாலே' ஆடு என்றதும் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி, வளைத்து, சிரிக்கும் சிரிப்பில் இந்த உலகமே இந்திர லோகம் தான் !
அதெப்படி குழந்தையின் உருவில் இறைவன் இயற்கையைப் படைத்தான் !
இன்னும் வளருது உலகம் வானம் நோக்கி !
வாழ்த்த வேண்டாமா பிஞ்சுக் கைகளை !
வாழ்க ! வாழ்க ! வாழ்க வளமுடன் !
செல்வி ஷங்கர்
Tuesday, February 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
வாங்க வாங்க வாழ்த்துங்க மழலையை
தவழவே தெரியாத தளிர்க் கால்கள் உதைக்க 'பாலே' ஆடு என்றதும் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி, வளைத்து, சிரிக்கும் சிரிப்பில் இந்த உலகமே இந்திர லோகம் தான் !
லண்டன் என்பதால் பிறந்ததும் பாலே ஆடுகிறாளோ ?அழகான கவிதை செல்வி அம்மா
வாழ்த்துக்கள்.. :)
\\கைகளைத் தலைக்கு மேல் தூக்கி, வளைத்து, சிரிக்கும் சிரிப்பில் இந்த உலகமே இந்திர லோகம் தான் !//
உண்மை உண்மை.. :)
குழந்தை வடிவில் இறைவன் இயற்கையை படைக்கவில்லை.
இறைவன் தன்னையே படியெடுத்து அனுப்புகிறான் என்பதே என் கருத்து.
இளம்பிஞ்சுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்..!
குழந்தையின் அருகாமை என்றுமே இனிமையானது. நம்மையும் குழந்தையாக்கும் தன்மை கொண்டது. நிலவும் குழந்தையும் கற்பனைக்கும் கவிதைக்கும் என்றுமே வற்றாத ஜீவ நதி. :)
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். இந்த வார்த்தைக்கு சாவே கிடையாது. ‘குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள் மழலைச் சொல் கேளாதோர்‘
வாழ்த்துகள் மழலைக்கும், பகிர்ந்து கொண்ட மனதுக்கும்.
ஆம் பூங்குழலி !
சின்னக்குழந்தை சிரித்தாடுவது இயல்பு தானே ! நமக்கும் அந்த மகிழ்வு வருகிறது பார்த்தால் !
வருகைகும் கருத்துக்கும் நன்றி
வாழ்த்துகள்
வருக முத்துலட்சுமி !
சிரித்து மகிழும் குழந்தை நம்க்கு ஒரு மகிழ்வூட்டி தானே ! நாம் பார்த்து மகிழ்வது அதற்கும் ஒரு மகிழ்வு தானே !
வருகைக்கு நன்றி !
வாழ்த்துகள்
ஆம் ஜோசப்
குழந்தை வடிவில் தானே இறைவன் !
அந்தக் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் நம் குழந்தையின் நினைவு நமக்கு வருமல்லவா !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோசப்
நல்வாழ்த்துகள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜூ
ஆம் ஜீவ்ஸ்
எங்கே நாம் நம்முடைய இளமையை மறந்து விடுவோமோ என்று தான் இறைவன் இயற்கையையும் குழந்தையையும் படைத்தான். படைப்பைப் போற்றி மகிழ்வோம் !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவ்ஸ்
வாழ்த்துகள்
அகநாழிகை !
மழலை இனிக்கும் ! சுவைக்கும் ! இன்பம் பயக்கும் ! குழலும் யாழும் குழைவது போல குழந்தை சிரிப்பல்லவா !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
நல்வாழ்த்துகள் !
Post a Comment