Wednesday, December 8, 2010

என் எழுத்து வலையில்

எழுதுவதற்கு ஏடும்
படிப்பதற்கு நூலும்
கைக்கெட்டும் இடத்தில் !

அமர்வதற்கு இருக்கை !
ஆற அமரப் பார்ப்பதற்கு
அழகான காட்சி காலதரில் !

அன்பான சிந்தனையில்
அருமையான பாட்டு
வானொலியில் !

மின் விசிறி இல்லாத மென் காற்று
மாலை நேரப் பறவையாய்
மழலையரின் வருகை !

கைப்பிடித்து ! காரில் !
பாசமுள்ள தந்தையின் தோளில் !
பார்வைப் புன்னகை !
மின்னும் விழிகள் !
வித விதமாய் உடைகள் !
பொம்மைகள் போலே
மழலையர் !

சுதந்திர உடையில்
இறகுப் பந்துகள்
இங்கும் அங்கும் துள்ள
இளமென் நடையினர் !

இவரெல்லாம் என் சிந்தையில் !
சில நேரம் என் எழுத்து வலையில் !


செல்வி சங்கர்

3 comments:

செல்விஷங்கர் said...

அலை பேசியில் அழைத்துப் பேசிய பதிவருக்கு நன்றி

arasan said...

மென்மையான வரிகள்..

நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்..

செல்விஷங்கர் said...

அரசன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி