Friday, December 10, 2010

அதுதான் முதுமையோ !

மாறும் உலகில் புதுமை !
பழமை நினைவில் நிகழ்வு !
அன்பு மனத்தில் அமைதி !
ஆற்றும் செயலில் அருமை !
பழகும் நட்பில் உறவு !
பண்பாய்ப் பழகிய பெரியோர் !
வளர்ந்து விட்ட மழலையர் !
படித்துச் சுவைத்த கருத்துகள்!
எல்லாம் நினைவில் இனிமை !
என்றும் கருத்தில் இளமை !
நிகழ்வில் மட்டும் தனிமை!
அது தான் வாழ்வில் முதுமையோ !

5 comments:

செல்விஷங்கர் said...

சோதனை மறுமொழி

shammi's blog said...

தனிமை என்பது முதுமையில் சுமத்த படும் ஒரு வறுமை ...

செல்விஷங்கர் said...

வருகைக்குகும் கருத்துக்கும் நன்றி ஷம்மி - நல்வாழ்த்துகள்

sathishsangkavi.blogspot.com said...

Nice...

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கவி - நல்வாழ்த்துகள்