Wednesday, October 10, 2007

என் மொழி - 2 !!

சிந்தனைப் பூக்களின் தொடர்ச்சி :

---------------------------------------------------


பேசாமல் பேசும் வித்தையைக் கற்றுக் கொள் !


வள்ளுவத்தைப் படித்தால் வாழ்க்கை மேம்படும் !


வானவில்லை வளைக்க முடியாது.
ஆனால் வாழ்வை வானளவு உயர்த்தலாம் !


என்ன மனிதர்கள் இவர்கள் - எண்ணத்தால் தாழ்ந்தவர்கள் ?


எப்படிப் பார்த்தாலும் வாழ்க்கை வட்டப்பாதை
தான் ! ஏன் வழி தடுமாற வேண்டும் ?


சொன்னால் சிரிக்கின்ற செயல்களை எல்லாம் மனிதன் செய்துகொண்டு தான் இருக்கிறான்.


எண்ணத்தால் தாழ்ந்த மனிதர்கள் எளிதில் எதிர்படுவதில்லை.


பூட்டி வைத்ததிலும் திறக்க முடியாத எண்ணங்கள் மனக்கதவைத் தட்டிக் கொண்டுதான் நிற்கும்.


காற்றில் பறக்கவும், கடலில் மிதக்கவும், நிலத்தில் தாவவும், நெருப்பில் நிற்கவும் நீ என்ன தமிழா ? நினைவுகளைப் புடம் போட்டுக்கொள்; புத்துலகுக்கே சென்று வரலாம் !


காற்றடித்தால் பறப்பது குப்பைகள் மட்டுமல்ல !
கலைந்த எண்ணங்களும் தான் !


ஏற்றி விடுவதற்கு ஒருவர் இருந்தால் இறங்குவதற்குக் கூட துணை தேடுவோம் !


---------------------------------------------------------

சிந்தனைப் பூக்கள் இன்னும் பூக்கும் !

---------------------------------------------------------

3 comments:

cheena (சீனா) said...

எண்ணங்கள் சிறகடித்துப் பறக்கின்றன - மேன்மேலும் சிந்தனைப் பூக்கள் பூக்க வாழ்த்துகள்

Anonymous said...

sindhikka vaikkum sindhanai pookkal sirappu!

செல்விஷங்கர் said...

நன்றி அனாமி - தமிழில் தங்கள் பெயருடன் தட்டச்சு செய்யலாமே