Thursday, October 9, 2008

மாற்றொலி

சுற்றும் உலகம் நின்றால்
சுழலும் மானிடம் என்னாகும் ?
கற்கும் மாந்தர் காண்பது
தெற்கும் வடக்கும் திகழும்
திசையா ? நீந்தும் தீவா ?
சுற்றிச் சுற்றி வந்தாலும்
தட்டித் தட்டிப் பார்த்தாலும்
எட்டி எட்டிச் சென்றாலும்
எங்கும் திகழும் அமைதியே !
சுற்றும் கால்கள் ! சுழலும்
கண்கள் ! காண்பதெல்லாம்
அமைதி ! மின்னல்போலே
மின்னொளி மிளிரும் காலதர் !
மரங்கள் சூழ்ந்த மாடங்கள் !
நிழல்கள் அசையும் மாந்தர் !
காற்றில் மிதக்கும் பேச்சொலி !
கண்கள் நோக்கும் அமைதி !
கால்கள் தேடும் ஓய்வு !
மனமது நினைத்தால் ---------- !!

செல்வி ஷங்கர்

5 comments:

செல்விஷங்கர் said...
This comment has been removed by the author.
செல்விஷங்கர் said...

மாற்றொலி கேட்கிறதா ? மனமது விளிக்கிறதா ? கேட்டால் சொல்லுங்கள்

Noddykanna said...

"minnoli millirum kaaladhar" - agaraathi thaedi ninaivu paduthikondaen kaaladhar-in porul!

ariya sorkal, arumaiyaana porul. orae ulagam, ovoruvarukkum ovvoer maadiri!

sutrum ulagathil soozhum amaidhi - iyarkayin innoru mugam!

miga arumai, vaazhthukkal!

-- Noodykanna

செல்விஷங்கர் said...

காற்று வரும் வழியைக் காலதர் என்று எல்லாரும் சொல்ல வேண்டும் என்பது என் வெகு நாளாசை. அது இயல்பாய்க் கவியில் வந்தது. கவிதையின் கருவே நாடிக்கண்ணா தான்.

மறு மொழி கண்டு மகிழ்ந்தேன் - வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

//கண்கள் நோக்கும் அமைதி !
கால்கள் தேடும் ஓய்வு !//

எங்கே எங்கே?

//மனமது நினைத்தால் ---------- !!//

மாற்றொலி கேட்கிறது. அருமை அம்மா.