Sunday, November 2, 2008

எத்தனை பெரிது உலகம் ?


என்ன செய்கிறாள் என்னவள் ?

இந்தக் கோட்டையைப் பிடித்து விடுவாளா ?

இல்லை சிகரம் தொட்டு விடுவாளா சின்னவள் ?

எத்தனை பெரிது உலகம் ?

என் கைக் குட்டிக் கரடியை விடவா !

இந்தப் பலகையில் அடக்கவா

அத்தனைக் காட்சியையும் .......... !

நான் எழுதிய எழுத்துகள்

என் பெயரின் பதிவுகள் !

இவைதானா இந்த மொழி !

இதில் தானா இத்தனை படைப்புகள் !

என் கண்களுக்குள் கருத்தாய்ச் சென்று

என் மனத்திரையில் மதியாய்ப் பரவி

நான் வடிக்கும் மழலைக்குள் மகிழ்வாய்

வரை கோடாய் வந்ததே இப்பலகையில் !
செல்வி ஷங்கர் : எங்களுடைய செல்லப் பேத்தி முதன்முதலாய் அவள் பெயரை எழுதிய பலகை


8 comments:

செல்விஷங்கர் said...

சோதனை மறுமொழி

Thamiz Priyan said...

பலகையில் பெயர் என்ன இருக்குன்னு தெரியலையே? நந்தினின்னு இருக்குன்னு நினைக்கிறேன்... :)

செல்விஷங்கர் said...

ஆமா தமிழ் பிரியன் - நந்தினி தான்

Noddykanna said...

"எத்தனை பெரிது உலகம் ?
என் கைக் குட்டிக் கரடியை விடவா !
இந்தப் பலகையில் அடக்கவா
அத்தனைக் காட்சியையும் .......... !"

-- உலகமறியத் தொடங்கும் மழலை,
ஆழ்ந்து அறிய, அனுபவம் தொடங்கும்! வா பெண்ணே, வா! வாழ்ந்து பார்ப்போம் வா!

அழகான கருத்து, அருமையான வடிவம்! வாழ்த்துகள்!

-- நாடிக்கண்ணா

செல்விஷங்கர் said...

நாடிக்கண்ணா - வருகைக்கு நன்றி

பேத்தியின் எழுத்தில் மயங்கி எழுதிய கவிதை

வளமை இருக்கிறது உலகில் - வாழ்ந்து பார்க்கலாம் - வளர்க

வாழ்த்துகள்

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள் நந்தினிக்கு! நல்லா எழுதியிருக்கீங்க..

//எத்தனை பெரிது உலகம் ?
என் கைக் குட்டிக் கரடியை விடவா !//

ரொம்ப ரசித்தேன்!!

செல்விஷங்கர் said...

அன்பின் சந்தனமுல்லை

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

செல்லப் பப்புவிற்கும் நல்வாழ்த்துகள்

செல்விஷங்கர் said...

அன்பின் சந்தனமுல்லை

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

செல்லப் பப்புவிற்கும் நல்வாழ்த்துகள்