Thursday, October 9, 2008

மனக் குரல் - எண்ணக் குறள்

மனத்தில் தோன்றிய எண்ணங்களைக் குறளாய் வடித்திருக்கிறேன்.

கண்டும் உணர்ந்தும் கவிகள் பயில்வதே
என்றும் இளைஞர் நிலை.

அருகிருந்(து) ஆன்றசொல் பேசி விருந்தெதிர்
கொள்ளவே நாளும் நினை.

பாடம் படித்தே பலகலை போற்றிட
வேடம் தவிர்த்தே இரு.

சின்னக் குழந்தை சிரித்தே மகிழ்ந்திட
வண்ணக் கதைகள் உரை.

வளர்ந்த மரங்கள் மலர்ந்த செடிகள்
நிறைந்த வனமே நிலம்.

உண்மை உரைத்தே உவகை நிறைந்திட
நன்மைச் செயலே புரி.

செல்வி ஷங்கர்

13 comments:

செல்விஷங்கர் said...

மனக்குரல் கேட்கிறதா - கேட்டால் சொல்லுங்களேன் !

Noddykanna said...

manakural tharkaala kuraL miga arumai!


"chinna kuzhandhaigal sirithae magizhndhida vanna kadhaigal"

"yelaa vallamum niraindhadhae nilam"

aaya kalaigal , unnmaiyaai irundhu karpadhuvae -- arumai

yelliya sol, yaavarkkum puriyum vannam seidhi - miga arumai.
Vaazhthkkal!

--Noddykanna

செல்விஷங்கர் said...

சிறிய சொல்லில் சீரிய கருத்தினைத் தர வேண்டும் என்பது குறளைப் படிக்கும் போதெல்லாம் என் உள்ளத்தில் தோன்றும். அதன் எதிரொலி தான் இம்மனக் குரல்.

நல்வாழ்த்துகள் நாடிக்கண்ணா !

செல்விஷங்கர் said...

வருகைக்கு நன்றி சிவசின்னப்பொடி

ராமலக்ஷ்மி said...

மனக் குரல் வடித்த எண்ணக் குறள்கள் யாவும் அருமை.

//கண்டும் உணர்ந்தும் கவிகள் பயில்வதே
என்றும் இளைஞர் நிலை.//

//சின்னக் குழந்தை சிரித்தே மகிழ்ந்திட
வண்ணக் கதைகள் உரை.//

குறிப்பாக இவை என்னை மிகவும் கவர்ந்தன.

NewBee said...

அருமை அருமை அம்மா! :)))

இன்னும் இன்னும் வேண்டும். தொடர்ந்து எழுதுங்களேன்.

//சின்னக் குழந்தை சிரித்தே மகிழ்ந்திட
வண்ணக் கதைகள் உரை.
//

ஹி..ஹி..சரி....:P

ராமலக்ஷ்மி said...

//கண்டும் உணர்ந்தும் கவிகள் பயில்வதே
என்றும் இளைஞர் நிலை.//

ஹிஹி, புதுவண்டு அப்போ இது எனக்கு:)!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புதுவண்டைப்போலவே எனக்கும் அந்த சின்னக்குழந்தை குறள் தான் ரொம்பப்பிடிச்சது.. ஏன்னா நாங்க சின்னக்குழந்தைகளை ரசிச்சிட்டு இருக்கற அம்மாக்களாச்சே... :)

அகரம் அமுதா said...

பொதுவாக வெண்பாவில் அதிகமாக ஏகாரம் அதிகமாக இடுவது சிறப்பில்லை. நீங்கள் தலைதட்டும் என்பதற்காக ஏகாரத்தை வலிந்து இட்டிருக்கிறீர்கள். அதுவாவது குழப்பமில்லை.

சின்னக் குழந்தை சிரித்தே மகிழ்ந்திட
வண்ணக் கதைகள் உரை.

இப்பாடலில் "சிரித்து மகிழ்ந்திட" என்றெழுதினால் நலம். பொதுவாக சிரிக்காமல் எப்படி மகிழ்ச்சியை வெளிக்கொணரமுடியும்? சிரிப்பதென்பதே மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் செயலல்லவா? ஆதலால் "சிரித்து மகிழ்ந்திட" வே சரியென நான்கருதுகிறேன்.

சின்னக் குழந்தை சிரித்து மகிழ்ந்திட
வண்ணக் கதைகள் உரை.

அகரம்.அமுதா

செல்விஷங்கர் said...

அன்பின் ராமலக்ஷ்மி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

//கண்டும் உணர்ந்தும் கவிகள் பயில்வதே
என்றும் இளைஞர் நிலை.//

இது தங்களுக்குப் பொருந்தும்

செல்விஷங்கர் said...

புது வண்டே - இக்குறள் உனக்காகவே எழுதப்பட்ட குறள் - உன் செயலை நினைத்து எழுதப்பட்ட குறள்

நல்ல கதையினை நாளும் சொல்க !

நல்வாழ்த்துகள்

செல்விஷங்கர் said...

அன்பின் முத்துலெட்சுமி,

கதை கேட்டு வளரும் குழந்தை கருத்தூண்றி செயல் செய்யும். வளரும் குழந்தைகளுக்கு நல்ல கதைகளைச் சொல்லுங்கள் - நல்வாழ்த்துகள் - நன்றி

செல்விஷங்கர் said...

அகரம் அமுதா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஏகாரமிட்டு எழுதுவது என்னுடைய மொழி நடையில் எப்பொழுதுமே இயல்பாக அமைந்து விடும்.

தாங்கள் சுட்டிக் காட்டி இருப்பது நன்றே ! சிந்தையில் கொள்கிறேன்.