Saturday, September 4, 2010

எங்கே ? எங்கே ?

குருவி கூவுகிற என் குடிலில்
குலவி மகிழும் மரங்கள் !
கூண்டுகள் போலே மாடங்கள் !
மகிழ்வாய் இருக்கிறது மனத்திற்கு !
மழை வரும் போல மேகங்கள் !
மலைகள் தாங்கும் வானம் !
மாலை நேர மந்தாரம் !
மனம் மகிழும் மரக்கோலம் !
காற்றடித்துக் கலைகின்ற வானம் !
நேற்றைய நிலைமை திரும்புமா ?
நிலம் வெடிக்கும் வெக்கை மாறுமா ?
அடுக்கு மாடி 'ஏசி'க்கள் மேலே குயில்கள் !
அலை பாயும் கேபிளில் வரிசையாய் காகங்கள் !
பச்சை மரங்களின் கீழே கார்களின் வரிசை !
காய்ந்து கிடக்கும் ஆற்று வெளியில் குப்பைகள் !
தெப்பம் மறந்த குளத்தில் கிரிக்கெட் !
இன்னும் கொஞ்ச நாளில் இங்கே
இயற்கை எங்கே ? எங்கே ?

செல்வி ஷங்கர்

19 comments:

செல்விஷங்கர் said...

சோதனை மறுமொழி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்படித்தான் தேடிக்கிட்டிருக்கிறோம். பத்து வருடங்களுக்கு பிறகு தில்லியில் மழைமாசத்தில் மழைபெய்கிறது.. நின்ற யமுனை ஓடுகின்ற காட்சி..ஹ்ம் கடவுளுக்கு நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

இயற்கையைத் அழி(தொலை)ப்பதையே தொழிலாய் செய்து வரும் இந்தக் காலத்தில்.. கவிதை எழுதி கவலைப்படுவதைத் தவிர நாமென்ன செய்ய முடியும்?

ராமலக்ஷ்மி said...

//குருவி கூவுகிற என் குடிலில்
குலவி மகிழும் மரங்கள் !
கூண்டுகள் போலே மாடங்கள் !
மகிழ்வாய் இருக்கிறது மனத்திற்கு !
மழை வரும் போல மேகங்கள் !
மலைகள் தாங்கும் வானம் !
மாலை நேர மந்தாரம் !
மனம் மகிழும் மரக்கோலம் !
காற்றடித்துக் கலைகின்ற வானம் !//

இவை நேற்றைய நிலைமை எனும் பொழுதே ஏக்கம் சூழ்கிறது. சிந்திக்க வைக்கும் கவிதை.

Noddykanna said...

கருத்து அருமை! ஆக்கம் எளிமை! எங்கே? எங்கே? என ஏங்கும் இயற்கை, வரலாறாய் ஆகாமல், வனம் காப்போம்! வளம் காண்போம்! வாழ்த்துகள்!

goma said...

arumaiyaana aazhamaana karuththukkazh

செல்விஷங்கர் said...

அன்பின் முத்துலெட்சுமி

இயற்கை எங்கேயோ போய் விடும் என்று தான் மனம் தவித்துக் கொண்டிருக்கிறது.வளரும் தலைமுறை கூட சுற்றுச் சூழலைக் காக்க வேண்டுமே என்று எண்ண மறுக்கின்றனவே ... என் செய்வது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
செல்வி ஷங்கர்

செல்விஷங்கர் said...

இயற்கையை எப்படியாவது காக்க வேண்டுமே ! இல்லாவிட்டால் வருங்காலத் தலைமுறை வாடிவிடும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கா.பா
செல்வி ஷங்கர்

செல்விஷங்கர் said...

அன்பின் ராமலக்ஷ்மி

பசுமை மரங்களைப் பார்க்கும் போதெல்லாம் எப்படியாவது இவற்றைக் காக்க வேண்டுமே என்ற எண்ணம் தான் தோன்றுகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி
செல்வி ஷங்கர்

செல்விஷங்கர் said...

நிகழகாலம் வரலாறாய் ஆகி விடக் கூடாது நாடிக்கண்ணா ! இயறகையைக் காப்பதே வாழ்க்கை என்பதை உணர வேண்டும்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நாடிக்கண்ணா

செல்வி ஷங்கர்

செல்விஷங்கர் said...

அன்பின் கோமா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமா

செல்வி ஷங்கர்

நானானி said...

முதல் எட்டு வரிகளில் மனம் சிலுசிலுக்கிறது. மீதி வரிகள் விதிர்விதிர்க்க வைக்கிறது, செல்வி!!

காலையில் கேட்கும் சிட்டுக்குருவிகளின் கீச்கீச் இப்போது காணவே காணும். உயர்ந்தெழுந்த சொல்போன் கோபுரங்கள் அவற்றை வேரறுத்துவிட்டன.

செல்விஷங்கர் said...

அன்பின் நானானி

நான் காலையில் கேட்கும் பறவைகளீன் ஒலி வரவரக் குறைந்து விட்டது. மாலை வேளையில் ஒன்றிரண்டு குரல் கொடுக்கும் போது மனத்திற்கு இடமாய் இருக்கிறது. அதன் எதிரொலி தான் இக்கவிதை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நானானி
நட்புடன் செல்வி ஷங்கர்

vasu balaji said...

கான்கிரீட் காடுகளில் வாழும் எம் போன்றோருக்கு மழை கூட அழுக்காய்த்தான் பெய்கிறது.என்ன செய்ய? கவிதை அழகு:)

செல்விஷங்கர் said...

வானம்பாடிகள் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மதுரை செய்த தவம் இன்னும் இங்கே இயற்கை இருக்கிறது. ஒரு புறம் அது சென்னையாகிக் கொண்டிருப்பதைத் தான் தாங்க இயலவில்லை.

சதங்கா (Sathanga) said...

நல்ல கேள்வி. நல்ல சிந்தனை. தெரிந்தே அழிக்கின்றோம். என்னனு சொல்ல

செல்விஷங்கர் said...

அன்பின் சதங்கா

எப்படியாவது சுற்றுச் சூழலை காப்பதிலாவது நாம் சற்று ஈடுபட மாட்டோமா என்றுதான் மனம் ஏங்குகிறது.
இயறகை இப்படியாவது நிலைத்து நிற்க வேண்டுமே ! வருங்காலம் என்ன பதில் சொல்லும்

நல்வாழ்த்துகள்

நேசமித்ரன் said...

மலைகள் தாங்கும் வானம்

காற்றடித்துக் கலைகின்ற வானம்

அலை பாயும் கேபிளில் வரிசையாய் காகங்கள்

படிமங்கள் வியக்கும் வண்ணம் கோர்த்திருக்கிறீர்கள்

மாளும் மனித இனம் பின் வரும் தலைமுறைக்கு மீதம் வைக்கப் போவது உலோகங்கள் உருகும் பிளாஸ்டிக் மக்காத உலகு . உங்கள் எழுச்சி சிந்தனை நன்று. சொல்முறையில் மாற்றங்கள் வரின் கவிதையின் அழுத்தமும் அழகும் மிளிரும் . வாழ்த்துகள்

செல்விஷங்கர் said...

நேசமித்ரன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
முயல்கிறேன் சொல்முறையில் மாற்றங்கள் கொண்டு வர