ஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன்! ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன்.
கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது!
என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன்!
இது தான் நான்!
இது - மெய்!
இதைத் தவிர வேறில்லை எனக்கு!
4 comments:
AnbuthThamizhe,
aasaiyaai un magal un karam paTTrugiraaL....
than nilam ariyum mun
un balam arinthavaL....
than nizhal nambum mun
un kazhal paninthavaL.....
indru than sigaram evVulagariya
endrum than eruKaram unaiye ariya
anbuththamizhe,
un magal un karam paTTrugiraL.
enakku vaazhththa vayadillai
unakku yezhutha vazhitheriyum
un magalidam sol ethai "un magal sonnaL" endru
-Paasamudan Pri
அன்புள்ள பிரி
உன் கவிதை படிக்கும் போது எங்களுக்கு மிகப் பெருமையாக இருக்கிறது. தாய் எட்டடி பாய்ந்தால் நீ பதினாறடி பாய்கிறாய்.
வாழ்த்துகள்
சீனா
அன்பு மகளின் அருமைக் கருத்து
தமிழுக்குத் தூது
தமிழாக்கம் : சீனா : Cheena
--------------------------
அன்புத்தமிழே,
ஆசையாய் உன் மகள் உன் கரம் பற்றுகிறாள்.....
தன் நிலம் அறியும் முன்
உன் பலம் அறிந்தவள்
தன் நிழல் நம்பும் முன்
உன் கழல் பணிந்தவள்
இன்று தான் சிகரம் இவ்வுலகறிய
என்றும் தான் இருகரம் உனையே அறிய
அன்புத்தமிழே,
உன் மகள் உன் கரம் பற்றுகிறாள்....
எனக்கு வாழ்த்த வயதில்லை
உனக்கு எழுத வழி தெரியும்
உன் மகளிடம் சொல் இதை
"உன் மகள் சொன்னாள்" என்று
-பாசமுடன் ப்ரி
Post a Comment